மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்த கனமழை பெய்து வருகிறது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் கன மழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வங்க கடல் பகுதியில் நிலவிய கீழடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இது வரும் 24ஆம் தேதி வாக்கி புயலாக வலுப்பெற்று 25ஆம் தேதி மேற்கு வங்கம் வங்கதேச கடற்கரை ஓரத்தில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி கோவை திண்டுக்கல் தேனி தென்காசி நெல்லை உள்ளிட்ட 32 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.


திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்த நிலையில் திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் இடைவிடாமல் மிதமான மழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மிதமானது முதல் கனமழை என்பது பெய்து வருகிறது. திருவாரூர் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி நன்னிலம் கூத்தாநல்லூர் கொரடாச்சேரி வலங்கைமான் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த கனமழை பெய்து வருகிறது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.


திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

குறிப்பாக இந்த மழை என்பது சாலையோர வியாபாரிகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது காரணம் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் சாலையோரத்தில் துணிக்கடை பழக்கடை பூக்கடை என பல்வேறு கடைகளை சாலையோர வியாபாரிகள் அமைத்து தங்களை வாழ்வாதாரத்தை நகர்த்தி வரும் நிலையில் இந்த மழையால் சாலையோரத்தில் கடைகள் போட முடியாமலும் மழையின் காரணமாக வியாபாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர் லட்சக்கணக்கில் கடன் வாங்கி முதலீடு செய்து தற்பொழுது மழையின் காரணமாக பொருளாதார நஷ்டத்தை சந்திக்க கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும் மழை விட்டால் மட்டுமே எங்களுடைய வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் எனவும் சாலையோர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த மழை பெய்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும். மேலும் திருவாரூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் மழை நீர் சாலை முழுவதுமாக தேங்கி இருக்கிறது மழைக்காலத்திற்கு முன்னதாக இந்த சாலையை செப்பண்ணிடும் பணிகளை முடிக்க செய்ய வேண்டும் இல்லை என்றால் தினந்தோறும் விபத்துக்கள் அதிகரிக்க நேரிடும் ஆகையால் மாவட்ட நிர்வாகம் வாகன ஓட்டிகளின் நிலையை கருத்தில் கொண்டு திருவாரூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை செப்பனிடும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget