மேலும் அறிய

திருவாரூரில் ஒரே நாளில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 24,293 பேர் - இதுவரை 7,57,263 பேருக்கு தடுப்பூசி

தமிழகம் முழுவதும் 4ஆவது கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இலட்சக்கணக்கான மக்கள் இந்த தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து பொதுமக்களை அறிவுறுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு ஊசி மாபெரும் முகாமை ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு தடுப்பூசியை சுகாதாரத்துறை சார்பில் செலுத்தி வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் மூன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நிறைவு பெற்றுள்ள நிலையில், நேற்று தமிழ்நாடு முழுவதும் 4 ஆவது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத நபர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நான்காவது மாபெரும் கொரோனா தடுப்பு முகாமில் 400 முகாம்களில் 24,293 நபர்கள் நேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் ஒரே நாளில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 24,293 பேர் - இதுவரை 7,57,263 பேருக்கு தடுப்பூசி
தமிழ்நாடு அரசு 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களும் தடுப்பூசி தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும் என தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி ரவருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நபர்களுக்கு அரசின் சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பர பதாகைகள், மற்றும் பத்திரிக்கைகள் மூலமாகவும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள பல்வேறு விழிப்புணர்வு  நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டால் பொதுமக்கள் தங்களை தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை உதவியாக இந்த தடுப்பூசி அமையும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தான் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சுகாதாரத்துறை சார்பில் நேரடியாக சென்று அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி என்பது செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

திருவாரூரில் ஒரே நாளில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 24,293 பேர் - இதுவரை 7,57,263 பேருக்கு தடுப்பூசி
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நான்காவது மாபெரும் தடுப்பு முகாமில் மாவட்டம் முழுவதும் 400 முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. நேற்று ஒரே நாளில் 24,293  நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி  செலுத்திக்கொண்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை என ஒட்டுமொத்தமாக 7,57,263 நபர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம், அதேபோன்று மாங்குடி அரசு பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் என பல்வேறு இடங்களுக்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது பொதுமக்கள் அனைவருக்கும் முறையாக தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலச்சந்திரன், மற்றும் திருவாரூர் வட்டாட்சியர் தனசேகரன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget