மேலும் அறிய

Cyclone Mandous: மயிலாடுதுறையில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு

வங்க கடலில் உருவான புயல் காரணமாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது அது தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டு திருகோணமலைக்கு (இலங்கை) கிழக்கே 570 கி.மீ., யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 710 கி.மீ கிழக்கு-தென்கிழக்கே (இலங்கை), காரைக்காலில் இருந்து சுமார் 770 கி.மீ கிழக்கு-தென்கிழக்கே மற்றும் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 830 கி.மீ  தூரத்தில் நிலை கொண்டுள்ளது. 

Cyclone Mandous: மயிலாடுதுறையில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை வேளையில் மேலும் படிப்படியாக புயலாக வலுப்பெற்று, டிசம்பர் 8 -ஆம் தேதி காலை வட தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளது.  இது தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும்.

TN Rain Alert: உருவாகும் மாண்டஸ் புயல்.. 9ஆம் தேதி கொட்டித் தீர்க்கப்போகும் மழை.. எச்சரிக்கும் வானிலை மையம்..

Cyclone Mandous: மயிலாடுதுறையில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு

இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 26 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை மேடான பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வாணகிரி, தரங்கம்பாடி பகுதிகளுக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு மற்றும் காவல் நிலைய போலீசார் வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ள காரணத்தினால் இன்று  முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் மீனவ கிராமங்களை  சேர்ந்த விசைபடகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், மேலும் தங்கள் படகுகளையும், உடமைகளையும் பத்திரமாக வைத்துகொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

Ind vs Bang, 2nd ODI: கடைசி நேரத்தில் படையெடுத்த மெஹிதி ஹசன் -மஹ்முதுல்லாஹ் ஜோடி.. இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்கு!

Cyclone Mandous: மயிலாடுதுறையில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு

இந்நிலையில் புயலால் மற்றும் கனமழையால் ஏற்படும் பாதிப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழு உதவி ஆய்வாளர் பிரமோத் குமார் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சீர்காழி அருகே உள்ள வாணகிரி மீனவ கிராமத்தில் முகாமிட்டு உள்ளனர். பைபர் படகு, மரம் வெட்டும் இயந்திரம், கயிறு, அரிவாள், கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.

Cyclone Mandous: புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் மாண்டஸ் புயல்...வானிலை மையம் தகவல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget