Ind vs Bang, 2nd ODI: கடைசி நேரத்தில் படையெடுத்த மெஹிதி ஹசன் -மஹ்முதுல்லாஹ் ஜோடி.. இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி பேட்டிங்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க வீரர்களான அனாமுல் ஹக் மற்றும் லிட்டன் தாஸ் வந்த வேகத்தில் வெளியேற, அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 35 பந்துகளில் 21 ரன்கள் அடித்து வெளியேறினார்.
Innings Break!
— BCCI (@BCCI) December 7, 2022
Bangladesh post a total of 271/7 on the board.
Three wickets for Washington and two wickets apiece for Umran Malik and Siraj.
Scorecard - https://t.co/e8tBEGspdJ #BANvIND pic.twitter.com/B1hyZOdMas
வங்கதேச அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஷகில் அல் ஹாசன் 20 பந்துகளில் 8 ரன்களை எடுத்திருந்தபோது, வாஷிங்டன் சுந்தர் வீசிய 17 வது ஓவரை எதிர்கொண்டார். அப்போது அடிக்க முயற்சித்த ஷகிக் அல் ஹாசன் பந்தை மேலே உயர்த்தி ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
தொடர்ந்து, கடந்த சில போட்டிகளாக சொதப்பிவரும் முஷ்பிகுர் ரஹீம் 24 பந்துகளில் 12 ரன்கள் எடுத்துபோது மீண்டும் வாஷிங்டன் சுந்தர்- தவான் ஜோடி பிரிக்க, அடுத்து வந்த அஃபிஃப் ஹொசைனும் தான் சந்தித்த முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பிறகு, மஹ்முதுல்லாஹ் உடன் ஜோடி சேர்ந்த அஃபிஃப் ஹொசைன் இந்திய அணியின் பந்துவீச்சை பதம் பார்க்க தொடங்கினர்.
60 ரன்களுக்கே 6 விக்கெட்களை தடுமாறியபோது ஜோடி சேர்ந்த இந்த ஜோடி தலா அரைசதங்கள் கடந்து பார்ட்னர்ஷிப்பாக 148 ரன்கள் குவித்தது. 96 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த மஹ்முதுல்லாஹ், உம்ரான் மாலிக் வீசிய 47 வது ஓவரில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து உள்ளே வந்த நாசூம் அகமது தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து 18 ரன்கள் குவிக்க, மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற மெஹிதி ஹசன் 83 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அசத்தி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
WHAT. A. KNOCK 🔥
— ICC (@ICC) December 7, 2022
Mehidy Hasan Miraz brings up his maiden ODI century to help Bangladesh to a competitive total 💪#BANvIND | Scorecard 👉 https://t.co/A76VyZDXby pic.twitter.com/rYHU4n5iJr
இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களும், முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலில் தலா 2 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர்.