மேலும் அறிய

கண்கள் பேசிய காதல் திருமணமாக முடிந்தது... ரஷ்ய காதலியை சொந்த ஊரில் திருமணம் செய்த தஞ்சை வாலிபர்

மதுக்கூர் அருகே ரஷ்ய பெண்ணை இளைஞர் தமிழ் முறைப்படி திருமணம் செய்துக்கொண்டு கரம் பிடித்தார்.

தஞ்சாவூர்: கண்களால் பேசி இதயத்தை கவர்ந்த காதலனை தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் கரம்பிடித்த ரஷ்ய இளம்பெண் தமிழ் கற்றுக்கொண்டு நானும் தமிழ் பெண்ணாக மாறுவேன்  என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடு, மொழி, இனம் இவற்றைக் கடந்து கண்களால் பேசி, இதயம் கவர்ந்து மனமொத்து வரும் காதல் என்றும் நிலைத்து நிற்கும் என்பது வரலாற்று உண்மை. வரலாற்று உண்மையை மற்றொரு முறை நிரூபித்துள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த அதிலும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த யோகா ஆசிரியர். மதுக்கூர் அருகே ரஷ்ய பெண்ணை இளைஞர் தமிழ் முறைப்படி திருமணம் செய்துக்கொண்டு கரம் பிடித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே புலவஞ்சி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த மணியன் - கிருஷ்ணம்மாள் தம்பதியின் மகன் பிரபாகரன் (33). இவர் ரஷ்யாவில் யோகா ஆசிரியராக, கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த கென்னடி - மயூரா தம்பதியின் மகள் அல்பினா (31) என்பவர் பிரபாகரன் யோகா கற்று வந்துள்ளார். யோகா கற்றுத் தந்த பிரபாகரனுக்கும், அல்பினா மனதில் மின்னல் வெடித்து, இதயம் இணைய காதல் என்ற அழகான மலர் மலர்ந்து உள்ளது. மொழியோ, மதமும், நாடோ இவர்களுக்கு பெரிதாக படவில்லை. காதல் என்ற அன்பு மலர் பூத்து நிற்க இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர்.

இது பற்றி மணமகள் வீட்டாரிடமும், தனது பெற்றோரிடம் பிரபாகரன் பேசி தங்கள் காதல் வலுவானது என்று நிரூபித்தார். இதையடுத்து மனமொத்த இந்த காதலர்களின் காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்ட, மகிழ்ச்சியில் திளைத்தார் பிரபாகரன்.

இதையடுத்து  மதுக்கூரில் பிரபாகரன், ஓதுவார்கள் முன்னிலையில், அல்பினாவுக்கு தாலி கட்டி, தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மணமக்கள் உறவினர்கள், கிராமத்தினரிடம் ஆசி பெற்றனர்.

கண்கள் பேசிய காதல் திருமணமாக முடிந்தது... ரஷ்ய காதலியை சொந்த ஊரில் திருமணம் செய்த தஞ்சை வாலிபர்

இதுகுறித்து மணமகன் பிரபாகரன் கூறுகையில்,  "நான் யோகா டீச்சராக பணியாற்றி வருகிறேன். என்னிடம் யோகா மாணவியாக அல்பினால் பயிற்சிக்காக வந்து கொண்டு இருந்தார். இருவரது மனமும் ஒன்றாக இருந்ததால் காதல் மலர்ந்தது. எங்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன், அவர்கள் முன்னிலையே சிறப்பாக திருமணம் நடந்தது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மணமகள் அல்பினால் கூறுகையில், "ரஷ்யா கலாச்சாரத்தை விட, தமிழ் கலாச்சாரமும், இங்குள்ள  மக்கள், வாழ்வியல் முறை, இயற்கை சார்ந்த அமைப்புகளும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன். கூடிய விரைவில் இங்குள்ள மக்களிடம் சகஜமாக தமிழ் பேசி நானும் ஒரு தமிழ் பெண்ணாக மாறிவிடுவேன்" என்றார். இந்த காதல் ஜோடிகளின் திருமணத்திற்கு வந்த உள்ளூர் மக்களுக்கு மிகவும் பெருமிதமாக இருந்தது அல்பினாலின் கருத்து என்றால் மிகையில்லை.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Embed widget