மேலும் அறிய

சூரியனார் கோயில் மடத்தின் 27ஆவது ஆதீனம் 102ஆவது வயதில் காலமானார்

’’சைவ சித்தாந்தப் பரம்பரைகள் இரண்டு உண்டு. ஒன்று தருமபுர ஆதீன பரம்பரை. மற்றொன்று இந்தச் சிவாக்கிர யோகிகள் பரம்பரையாகும்’’

பல நுாறு ஆண்டுகள் மிகவும் பழமையான தஞ்சை மாவட்டம்,  சூரியனார்கோயில் ஆதீன மடத்தின் 102 வயதான  27 வது ஆதீனம் சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார் சைவ சித்தாந்தப் பரம்பரைகள் இரண்டு உண்டு. ஒன்று தருமபுர ஆதீன பரம்பரை. மற்றொன்று இந்தச் சிவாக்கிர யோகிகள் பரம்பரையாகும். சிவாக்கிர யோகிகள் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழிலும் வடமொழியிலும் நூல்கள் பல இயற்றியவர். இந்தச் சிறப்புப் பற்றி இவருக்கு முன்னும் பின்னும் வாழ்ந்தவர்களை இவரது பெயரால் பரம்பரை எனக் குறிப்பிடலாயினர். இவருக்குச் சிவக்கொழுந்து சிவாசாரியார் என்ற பெயரும் உண்டு. இவர் வேளாளர் மரபில் வந்தவர்.  திருக்கயிலாய பரம்பரை - தரும்புர ஆதீனப் பரம்பரையும் இப்பெயரால் குறிப்பிடப்படும். கந்தனிடம் உபதேசம் பெற்றதால்  கந்த பரம்பரை' வாமதேவர் மூலம் நிலவுலகில் தோன்றியமையால் வாமதேவ பரம்பரை சதாசிவ பரம்பரை - சதாசிவ சிவாசியார் உபதேசத்தால் பெற்ற பெயர்.

இரண்டு பரம்பரைக்கும் உபதேசம் பெற்ற சந்தான வரிசை வேறு. இவர்கள் வாழையடி வாழையாக அவரவர் குருவிடம் ஞானம் பெற்றவர்கள். சூரியனார் கோயிலுக்கு ஓர் ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனம் சிவக்கொழுந்து தேசிகர் என்னும் சிவாக்கிர யோகியால் தோற்றுவிக்கப்பட்டது. இவருக்கு முன்னரும் இந்தக் கோயிலுக்குப் பரம்பரை உண்டு என்று காட்டுகின்றனர். 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பரம்பரை இன்றும் தொடர்கிறது. பரம்பரை வரிசையில், ஸ்ரீ கண்ட பரமசிவம், கந்த சுவாமி, வாமதேவ ரிசி, நீலகண்ட சிவாசாரியர், விசுவேசுர சிவாசாரியர், சதாசிவ சிவாசாரியர்.

சூரியனார் கோயில் மடத்தின் 27ஆவது ஆதீனம் 102ஆவது வயதில் காலமானார்

இவர் வடமொழியில் சிவஞானபோத விருத்தி எழுதியவர், சிவமார்க்கப் பிரகாச சிவாசாரியர், சிவக்கொழுந்து தேசிகர்  எனும் சிவாக்கிர யோகிகள்  ஆதீனத்தை நிறுவியவர். வீழி சிவாக்கிர யோகிகள், பெரும்பெருஞ் சாத்திரங்கள் செய்தவர்,  நந்தி சிவாக்கிர யோகிகள், சிவநெறிப் பிரகாச உரை, சிவப்பிரகாச உரை ஆகிய உரைநூல்களை இயற்றிவர், சிவக்கொழுந்து தேசிகர், சொக்கலிங்க தேசிகர், இவர் திருமாந்துறைப் பண்டார சந்நிதி.இதற்கிடையில், சில ஆண்டுகளில் ஏழு ஆச்சாரியர் பரம்பரைத் தலைமையை ஏற்றிருந்தனர். இவர்களில் அம்பலவாண தேசிகர் என்பவர் மட்டும் கேரளப் பிராமணர். ஏனையோர் அனைவரும் வேளாளர் குலத்தினர்) முத்துக்குமார தேசிகராகும்.

சூரியனார் கோயில் மடத்தின் 27ஆவது ஆதீனம் 102ஆவது வயதில் காலமானார்

இத்தகைய சிறப்பு வாய்ந்த பல நூறு ஆண்டுகள் மிகவும் பழமையான தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே, சூரியனார் கோயில் ஆதீன மடத்தின்  27 ஆவது சந்நிதானமாக அருளாட்சி புரிந்த ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடங்குளம் கிராமத்தில் பிறந்தார்.  இவர், இளமையிலேயே இறைவழிபாட்டில் நாட்டம் கொண்டு, திருவாவடுதுறை ஆதீனமடத்துக்கு வந்து துறவு பெற்றார். இந்த ஆதீனத்தில், மூத்த தம்பிரான் சுவாமிகள் ஒருவராக இருந்து மெய்கண்டாரின் முக்தித்தலமான திருவெண்ணெய்நல்லூர் கிளை மடத்திலும், சிவஞான முனிவர் உறைந்த தலமாகிய காஞ்சிபுரம் கிளை மடத்திலும் சிறப்பாக சேவை புரிந்தார். அதன்பின், திருவாவடுதுறை 23 வது சந்நிதானமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாசார்யா சுவாமிகளிடம் மந்திர கஷாயம் பெற்று சூரியனார்கோயில் மடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அங்கே, ஆதீனகர்த்தர் தெய்வசிகாமணி தேசிக குருமூர்த்தி சுவாமிகள் சிவப்பேறு அடைந்ததையொட்டி 27 வது  பட்டம் பெற்று, முறைப்படி ஞானபீடத்தில் எழுந்தருளி 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆதீனகர்த்தராக அருளாட்சி செய்து வந்தார். சைவ சமய வளர்ச்சியிலும் ஆதீன மேன்மையிலும் ஆர்வம் கொண்டு  தமது அருள் ஆட்சி காலத்தில் பல்வேறு பணிகளை மட்டத்தில் மேற்கொண்டார் பழமையான கோவில்களை புதுப்பித்து திருப்பணி செய்வதற்கு உறுதுணையாக இருந்து வந்தார். 102 வயது முதிர்வு காரணமாக காலை 11 மணி அளவில் சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
Embed widget