மேலும் அறிய

3 மணிநேரமாக நடந்த பதற்ற சூழ்நிலை... போலீசார் குவிப்பு: தமிழ்ப் பல்கலையில் நடந்தது என்ன?

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணை வேந்தராக சங்கரும், பதிவாளர் (பொ) தியாகராஜனும் உள்ளனர். இவர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணை வேந்தர் மற்றும் நீக்கப்பட்ட பதிவாளருக்கு இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பதிவாளரின் அறை பூட்டு போலீசார் பாதுகாப்புடன் உடைக்கப்பட்டு புதிய பதிவாளர் பதவி ஏற்றுக்கொண்டார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணை வேந்தராக சங்கரும், பதிவாளர் (பொ) தியாகராஜனும் உள்ளனர். இவர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த பிரச்சினை கடந்த சனிக்கிழமை அன்று உச்சத்தை எட்டியது. இருவரும், ஒருவரை ஒருவர் பணி நீக்கம் செய்வதாக உத்தரவிட்டனர்.

இந்நிலையில் பொறுப்பு துணைவேந்தர் வெளியிட்ட உத்தரவில் பதிவாளர் (பொ) தியாகராஜனை அப்பதவியில் இருந்து விடுவித்து புதிய பதிவாளராக பேராசிரியர் வெற்றிச்செல்வன் என்பவரை நியமனம் செய்து அறிவித்து இருந்தார். மேலும் புதிய பதிவாளர் (பொ) இன்று திங்கட்கிழமை பதவி ஏற்பார் என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவியது. இதனால் இன்று காலை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் புதிய பதிவாளரை பதவி ஏற்கவிடாமல் பதிவாளரின் அறையை, நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜன் பூட்டியதாக கூறப்படுகிறது. 

3 மணிநேரமாக நடந்த பதற்ற சூழ்நிலை... போலீசார் குவிப்பு: தமிழ்ப் பல்கலையில் நடந்தது என்ன?

இந்நிலையில் அந்த அறையின் வெளிக்கதவை பொறுப்பு துணைவேந்தர் சங்கர் பூட்டி விட்டாராம். இருவரும் அறைகளை பூட்டியதால் புதிய பதிவாளர் பதவி ஏற்பதில் பெரும் சர்ச்சை ஆனது. இதனையடுத்து பொறுப்பு துணைவேந்தர் சங்கரும், புதிதாக நியமனம் செய்யப்பட்டட பதிவாளர் வெற்றிச்செல்வனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினர். இந்த பரபரப்பு சூழ்நிலை தொடர்ந்து நீடித்து வந்தது. 

காலையில் ஆரம்பித்த இந்த பிரச்சினை 3 நேரம் தொடர்ந்த நிலையில் பதிவாளரின் வெளி அறை  திறக்கப்பட்டு, உள் அறையின் கதவுகளை பூட்டுக்களை ஊழியர்கள் உடைத்தனர்.  அப்போது நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜனின் ஆதரவாளர்கள் தலைமைச் செயலர் உத்தரவு இருக்கும்போது ஏன் கதவை உடைக்கிறீர்கள் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வாய்மொழி உத்தரவு எல்லாம் செல்லாது, துணைவேந்தர் உத்தரவு உள்ளது என போலீசார் அவர்களை வெளியிலேயே தடுத்து நிறுத்தினர். கதவு உடைக்கப்பட்ட பின்னர், புதிய பதிவாளர் வெற்றிச்செல்வன் உள்ளே சென்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்காக அவர் கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.

இதனால் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 3 மணி நேரம் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் நீக்கப்பட்ட பதிவாளர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது தலைமை செயலர் தொலைபேசியில் என்னிடம் தொடர்பு கொண்டு நீங்கள் பதிவாளராக தொடர்ந்து செயல்படுங்கள். மாத இறுதி என்பதால் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியங்களான பணிகளை தொடருங்கள் என்றார். 

எனவே பதிவாளர் அறைக்கு செல்லாமல், பக்கத்து அறையில் இருந்து அதற்கான பணிகளை தொடர்வேன். நான் பதிவாளராக தொடர்கிறேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து பொறுப்பு துணைவேந்தர் சங்கர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 40 பேர் நியமன முறைகேடு தொடர்பாக உள்ள வழக்கில் வரும் 8 தேதி நீதிபதி ஜெயச்சந்திரன்  விசாரணைக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். 

இந்த முறைகேடு விசாரணையில் நீக்கப்பட்ட தியாகராஜன் பெயரும் உள்ளதால் வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என அவரை பதிவாளர் பதவியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டேன். மேலும் சட்டப்பூர்வமாக புதிய பதிவாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதில் எந்த விதிமீறல்களும் இல்லை.

ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகாரம் புதிய பதிவாளர் வெற்றி செல்வனுக்கு உள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேட்டில் நீக்கப்பட்ட தியாகராஜன் பெயரும் உள்ளதால், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். 10 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை செய்த பிறகே பதிவாளரின் அறை உடைக்கப்பட்டது. அதில் எந்த விதிமீறல்களும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கு பின்னரும் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தனர். 

தலைப்பு செய்திகள்

நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 
தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget