மேலும் அறிய

தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 

சிறுகளத்தூரில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த முந்திரி தோட்டத்தை பார்வையிட்ட அவர், கடந்த ஆண்டுகளின் மகசூல் நிலவரம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

அரியலூர்:  அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் விவசாய விளைபொருட்களின் சந்தைப்படுத்தல் தொடர்பான வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகளத்தூர் ஊராட்சி மற்றும் உடையார்பாளையம் பேரூராட்சியில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? முந்திரி தோட்டத்தில் ஆய்வு

சிறுகளத்தூரில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த முந்திரி தோட்டத்தை பார்வையிட்ட அவர், கடந்த ஆண்டுகளின் மகசூல் நிலவரம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து தோட்டங்களை முறையாக பராமரித்து, நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி அதிக மகசூல் பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.

வாழை, கொய்யா சாகுபடிக்கும் ஆலோசனை

0.810 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மற்றும் கொய்யா தோட்டங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர், மரங்களின் வளர்ச்சி, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அரசு வழங்கும் மானியத் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகளை முழுமையாக பயன்படுத்தி, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ஆய்வு

ரூ.12.25 லட்சம் மானியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முந்திரி கொட்டை உடைக்கும் தொழிற்சாலையையும், உடையார்பாளையத்தில் ரூ.78.05 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மதிப்புக்கூட்டு மையத்தையும் பார்வையிட்டார். உற்பத்தித் திறன், தரக் கட்டுப்பாடு, சந்தைப்படுத்தல், தொழிலாளர்களின் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து, உற்பத்தியை மேலும் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 

சம்பங்கி சாகுபடியை விரிவுபடுத்த அழைப்பு

0.960 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பங்கி மலர் தோட்டத்தையும் பார்வையிட்ட அவர், மலரின் தரம், சந்தை வாய்ப்புகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தார். தோட்டக்கலைப் பயிர்களில் நல்ல வருமானம் தரக்கூடிய சம்பங்கி சாகுபடியை மேலும் விரிவுபடுத்த விவசாயிகள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அரசுத் திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும்

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகள் செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களின் பயன்களும் தகுதியான விவசாயிகளை முழுமையாக சென்றடைய வேண்டும் என்றும், தொழில்நுட்ப ஆலோசனைகள், நலத்திட்டங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் குறித்த வழிகாட்டுதல்கள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி உத்தரவிட்டார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 3,047 அப்ரண்டிஸ் பணியிடங்கள்! 10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம் – மாதம் ரூ.12,300 வரை உதவித்தொகை!
ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 3,047 அப்ரண்டிஸ் பணியிடங்கள்! 10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம் – மாதம் ரூ.12,300 வரை உதவித்தொகை!
விலைவாசி உயர்வால் திணறும் மக்கள்! தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வால் திணறும் மக்கள்! தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி ஆர்ப்பாட்டம்
புறவழிச்சாலையில் நேர்ந்த பரிதாபம்! சாலையோரம் இறந்து கிடந்த தேசியப் பறவை மயில்: வனத்துறையினர் விசாரணை
புறவழிச்சாலையில் நேர்ந்த பரிதாபம்! சாலையோரம் இறந்து கிடந்த தேசியப் பறவை மயில்: வனத்துறையினர் விசாரணை
மோப்ப நாய் ‘லிங்கா’வுடன் களமிறங்கிய போலீசார் – தஞ்சை ரயில் நிலையத்தில் எஸ்.பி அதிரடி சோதனை
மோப்ப நாய் ‘லிங்கா’வுடன் களமிறங்கிய போலீசார் – தஞ்சை ரயில் நிலையத்தில் எஸ்.பி அதிரடி சோதனை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
Kavithai Gopal:
Kavithai Gopal: "அட்ஜஸ்ட்மென்ட் பண்ணு பட வாய்ப்பு தர்றேன்" ஆதாரத்துடன் சிக்கிய கவிதை கோபால்!
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
இனி இந்தியாவிலும் நாங்கதான்.. வரப்போது Harley-Davidson X350T! விலை எவ்ளோ இருக்கும்?
இனி இந்தியாவிலும் நாங்கதான்.. வரப்போது Harley-Davidson X350T! விலை எவ்ளோ இருக்கும்?
Embed widget