மேலும் அறிய
Advertisement
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கப்பட்ட தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா திறப்பு விழா
கதை முற்றம் பகுதியில் உள்ள சுற்றுச்சுவரில் இராஜராஜ சோழன் வரலாறு பற்றிய கதை சொல்லும் சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட சிவகங்கை பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.
தஞ்சாவூருக்கு புகழ் சேர்க்கும் இடங்களில் சிவகங்கை பூங்காவிற்கு தனி சிறப்பிடம் உண்டு. இந்தப் பூங்காவில் மான்கள், மயில், புனுகு பூனை, முயல், நரி போன்றவை வளர்க்கப்பட்டு வந்தன. தஞ்சை மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு தலமாக இந்த சிவகங்கை பூங்கா விளங்கி வந்தது. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், சிறுவர் ரயில் சிவகங்கை குளத்தில் படகுகள், என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்து வந்தன.
இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா புதுப்பிக்கும் பணி நடந்தது. இதனால் இங்கிருந்த விலங்குகள் வேதாரண்யம் மற்றும் சென்னை வனவிலங்குகள் சரணாலயத்திற்கு அனுப்பப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக பணிகள் நடந்து முடிந்த நிலையில் திறப்பு விழா நடந்துள்ளது.
இந்த சிவகங்கை பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர்பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ச.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் (தஞ்சாவூர்), க.சரவணன் (கும்பகோணம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது: தஞ்சாவூர் நகரில் உள்ள சிவகங்கை பூங்கா 1942 ல் அமைக்கப்பட்டு நகராட்சியால் பராமரிக்கப்பட்ட மிகப்பழமையான பூங்காவாகும். இப்பூங்கா 6.307 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இப்பூங்காவினை சீரமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் 245 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுதல், 1216.60 மீட்டர் நீளத்திற்கு நடைப்பாதை அமைத்தல், முன் முகப்பில் அலங்கார வளைவு புதுப்பித்தல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறை புதுப்பித்தல், புல்தரை அமைத்தல், மரக்கன்றுகள் மற்றும் செடிகள் நடுதல், அனுமதி சீட்டுஅறை, கண்காணிப்பு கேமரா, அறிவிப்பு மையம், முதலுதவி சிகிச்சை மையம், அலங்கார மின்விளக்குகள், உணவகம், பெயர் பலகைகள், இருக்கைகள், சிறுவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல், தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைத்தல், மாதிரி அங்கன் வாடி மையம், புதுப்பித்தல், ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கதை முற்றம் பகுதியில் உள்ள சுற்றுச்சுவரில் இராஜராஜ சோழன் வரலாறு பற்றிய கதை சொல்லும் சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது, பழைய கட்டிடத்தை புதுப்பித்து புதிய டெலஸ்கோப் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், உதவி கலெக்டர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், மாநகராட்சி ஆணையர் க.கண்ணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துசெல்வம், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, மண்டல குழுத் தலைவர் சந்திரசேகர் மேத்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
ஜோதிடம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion