மேலும் அறிய

விஷம் கலந்த மயக்க மருந்து கொடுத்து நகை கொள்ளை - தப்பியோடிய பெண்ணை தேடி வரும் போலீஸ்

’’காபியில் விஷகலந்த மயக்கமருந்து கொடுத்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் விஜயலட்சுமிக்கு தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில் தீவிர சிகிச்சை’’

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், தெற்கு வீதியில் வசித்து வருபவர் திருநாவுக்கரசு (55). பாபநாசம் பேரூர் திமுக 14வது வார்டு அவைத் தலைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (52). இவர் பாபநாசம் பேரூர்  முன்னாள் திமுக துணை செயலாளராக இருந்தவர். இவர்கள் தனது வீட்டில் உணவு விடுதி நடத்தி வருகின்றனர். விஜயலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் வீட்டு வேலைக்கும், உதவியாக இருப்பதற்கும் சாந்தா என்ற பெண்ணை வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் திருநாவுக்கரசு கும்பகோணத்திற்கு சென்றிருந்தார். அப்போது வேலைக்கு வந்த  சாந்தா காபியில் விஷம் கலந்த மயக்க மருந்தை விஜயலட்சுமிக்கு கொடுத்துள்ளார். மருந்தை சாப்பிட்ட உடனே, விஜயலட்சுமி, மயங்கினார். இதனை பயன்படுத்திக்கொண்டு சாந்தா, மயக்க நிலையிலிருந்த விஜயலட்சுமி அணிந்திருந்த 2.50 லட்சம் மதிப்புள்ள 9 சவரன் நகைகளை கழற்றி கொண்டு திருடி சென்று விட்டார்.

விஷம் கலந்த மயக்க  மருந்து கொடுத்து நகை கொள்ளை - தப்பியோடிய பெண்ணை தேடி வரும் போலீஸ்

இந்நிலையில், கும்பகோணத்திற்கு சென்ற திருநாவுக்கரசு வீட்டிற்கு வந்து பார்க்கும்போது மயங்கிய நிலையில் இருந்த விஜயலட்சுமி கழுத்தில் இருந்த தாலி, செயின், நகைகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருநாவுக்கரசு பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி, தலைமை காவலர் ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். நகைகளை திருடி சென்றது  வேலைக்காக சேர்ந்த சாந்தா என உறுதிப்படுத்தினர்.  வேலைக்கார பெண் சாந்தாவை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷம் கலந்த மயக்க  மருந்து கொடுத்து நகை கொள்ளை - தப்பியோடிய பெண்ணை தேடி வரும் போலீஸ்

இது குறித்து போலீசார் கூறுகையில், திருநாவுக்கரசும், விஜயலட்சுமியில் தனியார் வசித்து கொண்டு, வீட்டிலேயே உணவு விடுதி வைத்து நடத்தி வருகின்றனர்.  விஜயலட்சுமிக்கு உடல் நலக்குறைவாக இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக, 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தினந்தோறும், விஜயலட்சுமி கடைக்கு வந்து, காபி வாங்கி சென்று வந்துள்ளார். சில நாட்களில் விஜயலட்சுமியிடம் பழகினார். விஜயலெட்சுமி உடல் நலமில்லாமல் இருப்பதையும், தானும் தன் கணவர் மட்டும் தான் தனியாக இருப்பதும் அப்பெண்ணுக்கு தெரிந்தது.

விஷம் கலந்த மயக்க  மருந்து கொடுத்து நகை கொள்ளை - தப்பியோடிய பெண்ணை தேடி வரும் போலீஸ்

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அப்பெண், தனது பெயர் சாந்தா என்றும், தான் தஞ்சாவூர், பூக்காரத்தெருவை சேர்ந்தவர் என்றும், தனது உறவினர் வீடான, பாபநாசம் ஆற்றங்கரைத்தெருவில் இருந்து வருவதாக தெரிவித்து, வேலைக்கு சேர்த்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். சில நாட்களாக நன்றாக பழகுகின்றார் என விஜயலட்சுமி, சாந்தாவை வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனால் வேலைக்கு சேர்ந்து மூன்று நாட்களுக்குள், காபியில் விஷகலந்த மயக்கமருந்து கொடுத்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில், தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாபநாசத்தில் பட்டபகலில், திமுக பிரமுகரின் வீட்டில் நுாதன முறையில் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகைகளை திருடி சென்ற சாந்தா, சென்று வந்த விபரங்கள் குறித்து அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவை கண்காணித்து வருகின்றோம் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget