மேலும் அறிய

எப்படி இருந்த தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா... இன்னைக்கு இப்படி இருக்கு: பொதுமக்கள் வேதனை

சுற்றுலாப்பயணிகளின் விருப்பமான இடமாக இருந்த தொல்காப்பியர் சதுக்கம் பூங்காவின் இன்றைய நிலை கண்டு மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்: சுற்றுலாப்பயணிகளின் விருப்பமான இடமாக இருந்த தொல்காப்பியர் சதுக்கம் பூங்காவின் இன்றைய நிலை கண்டு மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்த தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா மீண்டும் திறக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக தஞ்சை மாவட்டம் திகழ்கிறது. உலகப் பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரிய கோவில் அரண்மனை சரஸ்வதி மஹால் நூலகம், சுவாமிமலை தாராசுரம் கும்பகோணம் மகாமக குளம் பல்வேறு கோவில்கள் மனோரா கல்லணை போன்றவை சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களாகும். கடந்த 1995-ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில் நடந்த்து. அப்போது தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்படி மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளில் ஒன்றுதான் தொல்காப்பியர் சதுக்கம். தஞ்சையிலிருந்து நாகை -பட்டுக்கோட்டை சாலைகள் பிரியும் சந்திப்பில் 5 அடுக்கு கோபுரம் அமைப்பாக தமிழ் மொழிக்கு தொன்மையான இலக்கணம் படைத்த தொல்காப்பியர் நினைவு கோபுரம் அமைக்கப்பட்டது. இந்த இடம் தொல்காப்பியர் சதுக்கம் என பெயரிடப்பட்டது. ரூ.75 லட்சம் மதிப்பில் இந்த தொல்காப்பியர் சதுக்கத்தில் பூங்காவுடன் அமைக்கப்பட்ட கோபுரம் இப்பகுதியை சுற்றியுள்ள குடியிருப்பு மக்களுக்கு மாலைநேரத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்தும் இடமானது. இப்பகுதி மக்கள் மாலை நேரத்தில் பொழுது போக்க வேண்டும் என்றால் பெரிய கோயில் பகுதியில் உள்ள சிவகங்கை பூங்காவிற்குதான் வரணும். அதற்கு தீர்வாக வந்ததுதான் இந்த தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா.

எப்படி இருந்த தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா... இன்னைக்கு இப்படி இருக்கு: பொதுமக்கள் வேதனை

சின்ன குழந்தைகளுடன் பெற்றோர் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் இடமாக இந்த தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா மாறியது. மேலும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தர்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும் தொல்காப்பியர் சதுக்கம் அமைந்தது. இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல் சறுக்கி விளையாடுவதற்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் இந்த பூங்காவிற்கு வருவார்கள். 

ஐந்தாவது தளம் வரை செல்ல படிக்கட்டுகளும் உண்டு. 5வது தளத்தில் நின்று பார்த்தால் தஞ்சை நகரின் அழகை ரசிக்க முடியும். சுற்றிலும் கட்டிடங்களும், மறுபுறம் வயல்களும் மனதை கொள்ளைக் கொள்ளும். கோபுரத்தின் தளத்தில் நிற்கும் போது தழுவிச் செல்லும் காற்று சிலிர்க்க வைக்கும். தஞ்சைக்கு சுற்றுலா வருபவர்கள் பார்த்து ரசித்து, மாலைநேரத்தை இனிமையுடன் கழிக்க சிறந்த இடங்களில் தொல்காப்பியர் சதுக்கமும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொல்காப்பியர் சதுக்கம் பூங்கா  இன்று வரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. செயற்கை நீரூற்றுகள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து உபகரணங்களும் சேதமடைந்துள்ளன. பூங்கா வளாகத்திற்குள் பிளாஸ்டிக் பேப்பர் கப் மதுபாட்டில்கள் ஆங்காங்கே கிடக்கிறது. இந்த பூங்கா “குடி”மகன்களின் பார் போல் மாறிவிட்டது என்றுதான் கூற வேண்டும். இந்த பூங்கா பூட்டி இருப்பதை பயன்படுத்தி சிலர் ஏறி குதித்து மதுவை குடித்து விட்டு பாட்டில்களை அப்படியே போட்டு செல்கின்றனர். தொடக்கத்தில் இந்த தொல்காப்பியர் சதுக்கம் பூங்காவிற்கு செல்வதற்கு கட்டணம் எதுவும் இல்லாமல் இருந்தது.

அதன்பின்பு பெரியவர்களுக்கு ரூபாய் 5 வசூலிக்கப்பட்டது. சிறுவர் சிறுமியர்கள் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்பட்டனர். தற்போது செடி, கொடிகள் மண்டி கிடக்கும் இந்த பூங்காவை சீரமைத்து குழந்தைகள் விளையாடும் சாதனங்களையும் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Biggboss Tamil Season 8 LIVE:  NSK ரம்யாவின் கணவர் சத்யாவை பங்கேற்பாளராக அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி
Biggboss Tamil Season 8 LIVE: NSK ரம்யாவின் கணவர் சத்யாவை பங்கேற்பாளராக அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; 2 பேர் உயிரிழப்பு- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; 2 பேர் உயிரிழப்பு- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Biggboss Tamil Season 8 LIVE:  NSK ரம்யாவின் கணவர் சத்யாவை பங்கேற்பாளராக அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி
Biggboss Tamil Season 8 LIVE: NSK ரம்யாவின் கணவர் சத்யாவை பங்கேற்பாளராக அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; 2 பேர் உயிரிழப்பு- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; 2 பேர் உயிரிழப்பு- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Embed widget