மேலும் அறிய

இலவச மரக்கன்றுகள் உங்களுக்கு வேண்டுமா? என்ன செய்யணும்?

ஆத்திக்கோட்டை ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. மேலும் இலவச மரக்கன்றுகள் பெற என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தமிழ்நாடு வனத்துறை, தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம் சார்பில், இரண்டாவது பசுமை தமிழக தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், ஆத்திக்கோட்டை ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. மேலும் இலவச மரக்கன்றுகள் பெற என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்திக்கோட்டையில் மரக்கன்றுகள் நடும் பணி

மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆத்திக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ். சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் அமராவதி நித்தியானந்தம் முன்னிலை வகித்தார். வனவர் சிவசங்கர், வனக்காப்பாளர் மணவாளன், வேட்டைத் தடுப்பு காவலர்கள் சதீஷ் கண்ணா, ஆதவன், ஊராட்சி துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

இலவச மரக்கன்றுகள் உங்களுக்கு வேண்டுமா? என்ன செய்யணும்?

தேக்கு, குமிழ், மகாகனி மரக்கன்றுகள்

ஊராட்சிக்கு சொந்தமான இடங்களில் தேக்கு, குமிழ், மகாகனி, செம்மரம், ஈட்டி, நாவல், வேங்கை, வேம்பு, இலுப்பை, நீர்மருது, மகிழம், சொர்க்கம், வாகை, நாவல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

இலவச மரக்கன்றுகள் வேணுமா?

இலவச மரக்கன்றுகள் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் கூறியதாவது: பட்டுக்கோட்டை வனச்சரகப் பகுதியில் மட்டும் சுமார் 70 ஆயிரம் மரக்கன்றுகள் இவ்வாறு நடவு செய்யப்பட உள்ளதாகவும், விவசாயிகள், சமூக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு, பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி நாற்றுப்பண்ணை மூலம் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படும். 

இதற்கு விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் - 2 வழங்கி மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையம் அருகே உள்ள வனச்சரக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.  மேலும் 8838999827 (வனச்சரகர்), 9629961658 (வனவர்)  என்ற அலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மரக்கன்றுகள் ஏன் நட வேண்டும்?

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் வெயிலுக்கு அதிகமான மரங்களை வெட்டுதல், நகரமய மாக்கல், மக்கள் தொகை பெருக்கம், மின்சாதனங்கள் பயன்பாடு, நான்கு வழிச்சாலைகள் மற்றும் எரிபொருள்களால் வெளியேற்றப்படும் வாயுக்கள் தான் காரணம். தற்போது தமிழகத்தில் பாலைவனத்திற்கு நிகரான வெப்பநிலை நிலவுகிறது.

சொல்லப்போனால் ஒரு காலத்தில் பாலைவனப் பகுதிகளில்தான் 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். காலப்போக்கில் தமிழகம் பாலைவனம் போல் மாறிவருகிறது. மனிதர்களும், மனிதர்களின் செயல்பாடுகளும் தான் இந்த நிலைக்கு காரணம். காலத்தால் இந்த வெப்ப நிலை குறைவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். இந்தியாவில் மக்கள் தொகைக்கு இணையாக இருந்த மரங்களின் எண்ணிக்கை கால் பங்காகி விட்டது.

மரங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள அசுத்த காற்றை உள்வாங்கி புதிய காற்றை வெளிவிடுகிறது. மண் அரிப்பை தடுத்து நிலத்தை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. பூமியிலிருந்து நீரை சுழற்சி செய்து, காற்றில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. நாம் வாழ மட்டுமின்றி பறவைகள், பூச்சிகள், விலங்களுக்கும் அடைக்கலம் கொடுக்கிறது. மழைக்கு முக்கிய காரணங்களே மரங்கள்தான். அவை அழிந்து வருவதால் மழை காணாமல் போய் வருகிறது.

நாம் உயிர் வாழ காற்று அவசியம். அந்த காற்றில் 21 சதவீதம் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் இருக்கிறது. மரங்கள் கார்பன் டை ஆக்சைடை எடுத்து கொண்டு நமக்கு தேவையான ஆக்சிஜனை தருகிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 800 கிராம் ஆக்சிஜன் தேவை என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்தி வருகிறோம். இதனால் காற்றை விலை கொடுத்து வாங்கும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இதை மாற்ற மரக்கன்றுகளை நடுவதே சிறந்த செயலாகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget