தூய்மைப்பணியாளர்கள் அனைவரும் நலவாரியத்தில் பதிவு செய்வது கட்டாயம்: நலவாரிய தலைவர் அறிவுறுத்தல்
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார். கோரிக்கைளை பரிசீலித்து தீர்வுக் காண உத்தரவிட்டார்.

தஞ்சாவூர்: அனைத்து தூய்மைப் பணியாளர்களும் கட்டாயம் நலவாரியத்தில் பதிவு செய்து நலவாரிய அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி அவர்கள் தாட்கோ சார்பில் 100 தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, எம்எல்ஏ., டி.கே.ஜி.நீலமேகம் மாநகராட்சி மேயர்கள் சண்.இராமநாதன் (தஞ்சாவூர்). சரவணன் (கும்பகோணம்), தஞ்சாவூர் துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய துணைத் தலைவர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தெரிவித்ததாவது: தூய்மைப் பணியாளர்களின் பணி அர்ப்பணிப்பு மிக்க பணியாக உள்ளது. குறிப்பாக, கொரோனா போன்ற பேரிடர் காலத்தில், தங்கள் உயிரை துச்சமென எண்ணி தூய்மைப் பணியினை சிறப்பாக மேற்கொண்டு இலட்சக்கணக்கான மக்களின் இன்னுயிர்களை காத்துள்ளார்கள். இத்தகைய சிறப்பு மிக்க தூய்மைப் பணியாளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் தூய்மைப் பணியாளர்களின் நலனை காத்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தை உருவாக்கியுள்ளார்கள். எனவே, தூய்மைப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் இந்த நலவாரியத்தில் வழங்கிடலாம் தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியம் மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ரூ.10 கோடியினை இந்நலவாரியத்திற்கு வழங்கினார். இந்ந வாரியத்தின் மூலம் தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, பணியின் போது விபத்து ஏற்பட்டால் இழப்பீட்டு நிவாரணத் தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
எனவே. அனைத்து தூய்மைப் பணியாளர்களும் கட்டாயம் நலவாரியத்தில் பதிவு செய்து நலவாரிய அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். இதுமட்டுமல்லாமல், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தங்களுக்கான மருத்துவ முகாமும் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து, தங்கள் உடல்நலனை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் அரசின் சார்பில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் தங்களின் மேம்பாட்டிற்கான செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து கோரிக்கைளை பரிசீலித்து தீர்வுக் காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தாட்கோ மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த பணியின் போது ஒருகையினை இழந்த தூய்மைப் பணியாளருக்கு இழப்பீடு தொகையாக ரூ.1,00,000 -க்கான காசோலையும், ஒரு தூய்மைப் பணியாளரின் மகளுக்கு ரூ.1,500 கல்வி உதவித்தொகையும், 100 தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் என மொத்தம் 102 தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன். தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் குருநாதன், சேகர், தஞ்சாவூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, தாட்கோ மாவட்ட மேலாளர் தியாகராஜன், துணை மேலாளர் சுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





















