மேலும் அறிய

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்க வேண்டும் - தஞ்சை மாவட்ட ஆட்சியர்

தென்மேற்கு பருவமழை 2024 குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் நடத்தினார்.

தஞ்சாவூர்: தென்மேற்கு பருவமழை 2024 குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் நடத்தினார்.

மீட்பு, நிவாரணப்பணிகளை கண்காணிக்க வேண்டும்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை 2024 அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அதில் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை கண்காணித்திட வேண்டும்.

பாதிப்புகள் ஏற்படும் கிராமங்கள் கண்டறிப்பட்டுள்ளன

பேரிடர் காலங்களில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய கிராமங்களை மிக அதிக அளவில் பாதிக்கக்கூடிய கிராமங்கள் 3, அதிக அளவில் பாதிக்கக்கூடிய கிராமங்கள் 50, மிதமாக பாதிக்கக்கூடிய கிராமங்கள் 50 மற்றும் குறைவாக பாதிக்கக்கூடிய கிராமங்கள் 92 ஆகக்கூடுதல் 195 கிராமங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் 4500 முதல்நிலை பொறுப்பாளர்கள் கண்டறியப்பட்டு பேரிடர் காலங்களில் அரசுத்துறையினருடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். கால்நடைகளை பாதுகாப்பதற்கு 529 முதல்நிலை பொறுப்பாளர்கள் கண்டறியப்பட்டு பராமரிப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் உள்ளது.

584 நிவாரண மையங்கள் குறித்து ஆலோசனை

பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏதுவாக குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் பாதிக்கக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைப்பதற்கு 14 பலநோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உட்பட 195 நிவாரண மையங்களும், இதர பகுதிகளில் 389 நிவாரண மையங்களும் ஆக மொத்தம் 584 நிவாரண மையங்கள் குறித்தும், பேரிடர்களின் போது நிவாரண முகாம்களில் பயன்படுத்திட ஏதுவாக போதுமான அமாவு உணவு தானியங்கள், ரொட்டி, மருந்துகள், குழந்தைகளுக்கான உணவு, பால் மற்றும் பால் பவுடர்கள் ஆகியவற்றை தயார்நிலையில் உள்ளது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

121 இடங்களில் 118435 மணல் மூட்டைகள் தயார்

தஞ்சாவூர் மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழையின்பொது வெள்ள நீர் தேங்காதவாறு 6087 சிறு பாலங்கள் மற்றும் 515 பாலங்கள் சுத்தம் செய்யப்பட்டு நீர் தேங்காமல் வழிந்தோடுவதற்கு ஏதுவாக தயார்நிலையில் உள்ளது எனவும், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்வதற்கு ஏதுவாக 121 இடங்களில் 118435 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி நகராட்சி, வேளாண்துறை. வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகியவற்றில் 595 மரம் வெட்டும் இயந்திரங்கள், 30825 சவுக்குக்கம்புகள். 120 ஜேசிபி இயந்திரங்கள், 102 ஜெனரேட்டர்கள், 74 மரம் வெட்டும் இயந்திரங்கள், 50 படகுகள் மற்றும் 41 பம்ப் செட்டுகள் ஆகியவை தயார்நிலையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

துரிதமாக அனைத்து துறையினரும் பணியாற்ற வேண்டும்

இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் பேசுகையில்,  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 4303 ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் இருப்பு விபரம் 7- இல் 76 சதவீதத்திலிருந்து 99 சதவீதமும், 745ல் 51 சதவீதத்திலிருந்து 75 சதவீதமும் 1194ல் 26 சதவீதத்திலிருந்து 50 சதவீதமும் 1541ல்25 சதவீதத்திற்கு குறைவாகவும் 816-இல் நீரின்றியும் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையினரால் 261 பணிகள் 1210.29 கி.மீ பரப்பில் தூர்வாரப்பட்டுள்ளது. Sachet மொபைல் செயலியை பயன்படுத்தி இயற்கை இடர்பாடுகள் தொடர்பான எச்சரிக்கைகளை பெற்று துரிதமாக அனைத்து துறை அலுவலர்களும் பணியாற்றிட வேண்டும்.

பருவமழையை சமாளிக்க தயார் நிலை

பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், மருத்துவத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை, வருவாய்த்துறை. தீயணைப்புத்துறை. நெடுஞ்சாலைத்துறை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மோட்டார் வாகன பராமரிப்புத்துறை ஆகிய அனைத்துத் துறை அலுவலர்களும் தென்மேற்கு பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகளை எல்லா வகையிலும் சமாளிப்பதற்கு ஏதுவாக தயார்நிலையில் இருக்க வேண்டும். 

நிவாரணப்பணிகளை எவ்வித தொய்வும் ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும், உயிர் சேதம், கால்நடை சேதம் ஆகியவை ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் தென்மேற்கு பருவமழை 2024-ஐ எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget