மேலும் அறிய

தஞ்சை அருகே மாரியம்மன்கோவில் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்: திரளான மக்கள் பங்கேற்பு

முகாமில் பங்கேற்ற மக்களுக்கு சர்க்கரை நோய், பிளட் பிரஷர் போன்றவை பார்த்து தேவையானவர்கள் சிகிச்சை அளிக்க ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை துறை வாரியாக அளித்து பயன் பெற்றனர்.

தமிழக அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கும். அரசின் அனைத்து துறைகளும் தற்போது கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இதனால், அனைத்து துறைகளிலும் சேவைகளைப் பெற மக்கள் இணைய வழியாக அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அடித்தட்டு மக்கள் இணைய வழியில் சேவைகளைப் பெறுவதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால், அரசு சேவைகளைப் பெற பிறரின் உதவியை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அடித்தட்டு மற்றும் கிராமப்புற மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, அவர்களும் எளிதாக அரசின் சேவைகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தனது நேரடி கண்காணிப்பில் இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும், இதில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று மக்களின் மனுக்களை நேரடியாக பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தஞ்சை அருகே மாரியம்மன்கோவில் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்: திரளான மக்கள் பங்கேற்பு

இதில் அன்றாடம் பொதுமக்கள் அணுகும் வருவாய்த்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சிகள் துறை, மாநகராட்சிக்கு ஒட்டியுள்ள பஞ்சாயத்து, காவல் துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை மற்றும் மகளிர் திட்டம் ஆகிய 13 துறைகள் தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் இச்சிறப்பு முகாம்களில் பெறப்படும். 

இந்த அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தகுதியின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் விண்ணப்பம் அளித்து, தீர்வு கண்டு பயன்பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் ஊராட்சியில் நடந்தது. தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அருளானந்த சாமி, ஒன்றிய பெருந்தலைவர் வைஜெயந்திமாலா கேசவன், ஊராட்சித் தலைவர் சுஜாதா தனசேகர், துணைத் தலைவர் சாகுல் ஹமீது, ஒன்றிய கவுன்சிலர்கள் சரண்யா பாண்டியன், கவிதா குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் துறை வாரியான குறைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். முகாமில் பங்கேற்ற மக்களுக்கு சர்க்கரை நோய், பிளட் பிரஷர் போன்றவை பார்த்து தேவையானவர்கள் சிகிச்சை அளிக்க ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. முக்கியமான துறைகள் அனைத்தும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஏற்பாடுகளை செய்திருந்த மாரியம்மன்கோவில் ஊராட்சித் தலைவர் சுஜாதா தனசேகர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Embed widget