மேலும் அறிய

எலி விஷம் சாப்பிட்ட சிறுமிக்கு பிளாஸ்மா ஃபெரிசிஸ் சிகிச்சை அளித்து காப்பாற்றிய தஞ்சை மீனாட்சி மருத்துவமனை

எலிக்கொல்லி விஷம் (எலி பேஸ்ட்) சாப்பிட்ட 14 வயது சிறுமி தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட பிளாஸ்மா ஃபெரிசிஸ் எனப்படும் மேம்பட்ட சிகிச்சை முறையால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர்: எலிக்கொல்லி விஷம் (எலி பேஸ்ட்) சாப்பிட்ட 14 வயது சிறுமி தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட பிளாஸ்மா ஃபெரிசிஸ் எனப்படும் மேம்பட்ட சிகிச்சை முறையால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

சிறுமி உயிரை காப்பாற்றிய தஞ்சை மீனாட்சி மருத்துவமனை

தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் பலதுறை முக்கிய சிகிச்சை பிரிவைக் கொண்ட முதல் மருத்துவமனையான தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் குழு மிகவும் கொடிய எலிக்கொல்லி விஷத்தை (மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட ரடோல் பேஸ்ட்) உட்கொண்ட 14 வயது சிறுமிக்கு இரத்த ஓட்டத்தின் சுழற்சியில் இருக்கும் நச்சுகளை அகற்றும் ஒரு மேம்பட்ட இரத்த சிகிச்சையான பிளாஸ்மா ஃபெரிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மேம்பட்ட சிகிச்சை முறையால் அந்த சிறுமியின் உயிரை மீனாட்சி மருத்துவமனை காப்பாற்றி உள்ளது. 

எலி விஷம் சாப்பிட்ட சிறுமிக்கு பிளாஸ்மா ஃபெரிசிஸ் சிகிச்சை அளித்து காப்பாற்றிய தஞ்சை மீனாட்சி மருத்துவமனை

பிளாஸ்மா ஃபெரிசிஸ் மேம்பட்ட சிகிச்சை முறை

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் மன அழுத்தத்தில் இருந்த 14 வயது சிறுமி மிகவும ஆபத்தானதாகக் கருதப்படும் மஞ்சள் பாஸ்பரஸை 5% கொண்டுள்ள ரடோல் பேஸ்டை உடகொண்டார். மஞ்சள் பாஸ்பரஸ் என்பது சயனைடு போன்ற அதிக புரதம்-பிணைக்கும் பொருளாகும். மனித உடலில் இருந்து அதை அகற்றுவது ஒரு பெரும் சவால் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால்தான் கிராமப்புறங்களில் எலிக்கொல்லி விஷத்தால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிக அளவில் உள்ளது.

வழக்கமாக விஷம் உட்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில் இரத்தத்தைச் சுத்திகரிக்க சில வகையான டயாலிசிஸ் (ஹீமோடயாலிசிஸ் அல்லது ஹீமோபெர்ஃபியூஷன்) மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், மீனாட்சி மருத்துவமனை அந்த சிறுமிக்கு ஹீமோடயாலிசிஸ் அல்லது ஹீமோபெர்ஃபியூஷன் போன்று குறைந்த இரத்த அழுத்தம் அல்லது இதயத் துடிப்பு போன்ற சிக்கல்களை உருவாக்காத பிளாஸ்மாஃபெரிசிஸ் சிகிச்சையை மேற்கொண்டது. பிளாஸ்மா பரிமாற்றம் என்றும் அழைக்கப்படும் பிளாஸ்மாஃபெரிசிஸ். இந்த எலிக்கொல்லி விஷத்திற்கு மிகத் திறம்பட்ட விதத்தில் பலனளிப்பதாக இருக்கும். இது பாதிக்கப்பட்ட இரத்தத்தின் திரவப் பகுதியான பிளாஸ்மாவை, இரத்த அணுக்களிலிருந்து பிரித்து, அதை ஒரு சிறப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி நல்ல பிளாஸ்மா அல்லது பிளாஸ்மா மாற்று கொண்டு மாற்றியமைக்கும் முறையாகும். இச்செயல்முறை சிறுநீரக டயாலிசிஸ் போன்றது. இந்த சிகிச்சையை அடுத்து அந்த சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார்.

சிறுமியின் உடல்நிலை மேம்பட்டது

இது குறித்து மீனாட்சி மருத்துவமனை கிரிட்டிகல் கேர் மெடிசின் மற்றும் டாக்சிகாலஜி பிரிவுத் தலைவர் டாக்டர் - செந்தில் குமார் நிறுவனம் கூறியதாவது:  நோயாளி தனது தனிப்பட்ட பிரச்சனை மற்றும் மனச்சோர்வு காரணமாக எலிக்கொல்லி விஷத்தை உட்கொண்டுள்ளார்.  நான்கு நாட்களுக்குப் பிறகு வாந்தி வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி போன்றவை ஏற்பட்டதால் சிறுமி நம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோய் கண்டறிதலின் போது மஞ்சள் காமாலை மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளை நாங்கள் கண்டறிந்தோம்.

உளவியல் சார்ந்த நல மீட்பு

சிறுமி உட்கொண்ட எலிக்கொல்லி மஞ்சள் பாஸ்பரஸ் கொண்டிருப்பதால் நாங்கள் உடனடியாக பிளாஸ்மாஃபெரிசிஸ் சிகிச்சை முறையை பயன்படுத்தினோம் இந்த இரத்த சிகிச்சையின் மூன்று சுழறசிகளுக்குப் பிறகு அவரது உடலநிலை மேம்பட்டதுடன் மஞ்சள் காமாலையும் படிப்படியாகக் குறைந்தது. பின்னர் மற்ற சிக்கலகளுக்கும் நாங்கள் சிகிச்சை அளித்தோம்.  தொடர்ந்து சிறுமி உளவியல் சார்ந்த நல மீட்புக்காக மருத்துவமளையில் தங்கினார். இதை அடுத்து முழுமையான ஆரோக்கியத்துடன் சிறுமி டிசார்ஜ் செய்யப்பட்டார்.

எலிக்கொல்லி விஷத்தால் ஏற்படும் இறப்பை குறைத்துள்ளோம்

நாங்கள் விஷ பாதிப்புக்கு முழுமையான  சிகிச்சையை வழங்குகிறோம். பொதுவான விஷங்களில் பூச்சிக்கொல்லிகள் (ஆர்கனோபாஸ்பேட்) மற்றும் எலிக்கொல்லிகள் மஞ்சள் பாஸ்பரஸ் ஆகியவை அடங்கும். மஞ்சள் பாஸ்பரஸ் இன்றும் அதிக இறப்புக்குக காரணமாகிறது ஆனால் மக்கள் பொதுவாக நினைப்பது போல இது குணப்படுத்த முடியாததல்ல. எங்களது பலதுறை சார்ந்த அணுகுமுறை மற்றும் பிளாஸ்மாஃபெரிசிஸ் போன்ற நடைமுறைகள் மூலம், சமீபத்திய ஆண்டுகளில் எலிக்கொல்லி விஷத்தால் ஏற்படும் இறப்பு விகிதத்தை கணிசமாகக் குறைத்துள்ளோம். 

இருப்பினும், நோயாளிகளுக்கு நீண்டகால நிவாரணத்தை உறுதி செய்வதற்காக 24 மணி நேரமும் துல்லியமான கவனிப்பை வழங்கும். மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்கள் உள்ளிட்ட பலதுறை சார்ந்த கிரிட்டிகல் கேர் குழுவைக கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது. கிரிட்டிகல் கேர் குழு எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க நோயாளிகளுக்கு மனநல ஆலோசனை வழங்குகிறது

மீனாட்சி மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் மெடிசின்

மீனாட்சி மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் மெடிசின் மற்றும் டாக்சிகாலஜி பிரிவு பலவேறு துறைகளிலும் உள்ள அனைத்து ஸ்பெஷாலிட்டி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டிகளின் ஆலோசகர்களின் துணை கொண்ட தகுதிவாய்ந்த கிரிட்டிகல் கேர் மருத்துவர்களால் வழிநடத்தப்படுகிறது. இந்தப் பிரிவு நச்சுயியல் நோயாளிகளுக்கு மட்டுமின்றி. கரோனரிகாரடியாலஜி, நரம்பியல், நெஃபராலஜி, மகப்பேறியல் துறைகளில் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய, அறுவை சிகிச்சை சார்ந்த கிரிட்டிகல கேர் மற்றும் விபத்து சிகிச்சை நோயாளிகளுக்கும் ஆரோக்கிய மேம்பாட்டைக் கண்காணிக்கும். அனைத்து சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட உபகரணங்கள் கொண்டு 24x.7 விரிவான கவனிப்பை வழங்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது டாக்டர்.பாலமுருகன், GM ஆபரேஷன்ஸ், டாக்டர் அரிமாணிக்கம், HOD - அனஸ்தீசியா. கிரிட்டிகல் கேர். டாக்டர் பிரவீன், துணை மருத்துவ கண்காணிப்பாளர், டாக்டர் நித்திலன், ஆலோசகர் ஐசியூ & கிரிட்டிகல் கேர் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
Embed widget