மேலும் அறிய

ஒரே அறையில் 50 ஆசிரியர்களுக்கு கற்றல் பயிற்சி வகுப்பு - கொரோனா பரவாதா என ஆசிரியர்கள் கேள்வி

மூன்றாவது அலையை கருத்தில்கொண்டு ஒரு வகுப்பில் 20 நபர்கள் மட்டுமே அமர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மதிக்காது சிறிய அறையில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்திற்குட்பட்ட துக்காச்சி, திருமலைராஜபுரம், வண்ணக்குடி ஆகிய போக்குவரத்து தொடர்பில்லாத கிராமப் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு பேரிடர் காலத்தில் கற்றல் விளைவு குறித்து பயிற்சி வகுப்புகள்  நடைபெறுகிறது. கொரானா  தொற்று மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு  ஒரு வகுப்பில் 20 நபர்கள் மட்டுமே அமர வேண்டும் என மாநில கல்வியில் துறை திட்ட இயக்குனராக கருத்துரை தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை மதிக்காது ஒரு சிறிய அறையில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை வைத்து போதிய இடைவெளி இல்லாமல் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்து ஆசிரியர்கள் பயிற்சிக்கு வருவதால், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பயிற்சியில் ஈடுபடும் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு, சமூக இடைவெளி எனக் கட்டுப்பாடுகளோடு மக்களின் உயிர்காக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் பொழுது,   இத்தகைய சூழலில் பேருந்துகளில் பள்ளிகளுக்கு  வந்து செல்வதே ஆசிரியர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.


ஒரே அறையில் 50 ஆசிரியர்களுக்கு கற்றல் பயிற்சி வகுப்பு - கொரோனா பரவாதா என ஆசிரியர்கள் கேள்வி

இந்த நிலையில், ஆசிரியர்களுக்கு பயிற்சி என்னும் பெயரில் திருவிடைமருதூர் ஒன்றியத்திலும் போக்குவரத்து தொடர்பில்லாத கிராமங்களில் உள்ள பள்ளிகளில் மொத்த ஆசிரியர்களின்  எண்ணிக்கையை ஒரே இடத்தில் கூட செய்து பயிற்சி அளிக்கிறோம் என்னும் பெயரில் ஆசிரியர்களின் உயிரோடு விளையாடுவது போன்ற ஒரு நடவடிக்கையை கல்வித்துறை எடுப்பது கொரோனா என்னும் பெருந்தொற்றுக்கு வழிவகை செய்ய வாய்ப்பாக இருக்கும்.

இத்தனை அவசரமாக  இப்பயிற்சியை வழங்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லை. மாணவர்களுக்கு இன்னும் அடிப்படைக் கல்வியே முறையாக கற்பிக்கும் சூழல் இன்னும் முழுமை அடையாமல் இருக்கும் இச்சூழலில், கற்றல் விளைவுகள் குறித்த பயிற்சிக்கு இத்தனை அவசரம் ஏன் காட்ட வேண்டும், என்பது பெருத்த கேள்வியை எழுப்புகின்றது.ஒவ்வொரு குறுவள மையத்திற்கும் ஒரு பயிற்சியாளரைத் தேர்வு செய்து, பயிற்சிக்கான கருத்தாளர்களின்  எண்ணிக்கையை அதிகப்படுத்தி, ஆசிரியர்களுக்கு அவர்களது குறுவள மையத்திற்கு உட்பட்ட எல்லைக்குள் பயிற்சியை வழங்க வேண்டும்.


ஒரே அறையில் 50 ஆசிரியர்களுக்கு கற்றல் பயிற்சி வகுப்பு - கொரோனா பரவாதா என ஆசிரியர்கள் கேள்வி
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சியினைக் கையேடு வடிவில் தயாரித்து வழங்கும்  நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளலாம். அதனை விடுத்து, கருத்தாளர்கள் குறைவாக இருக்கின்றார்கள் என்பதற்காக, ஒரு ஒன்றியத்தில் பணியாற்றும் அத்தனை ஆசிரியர்களையும் ஒரே இடத்தில்  கூடச் செய்வதும்,  10 நாட்களுக்கு தினந்தோறும்   பேரூந்துகள் தொடர்பில்லாத கிராமப் பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் பங்கேற்க செய்வதும், ஆசிரியர்களின் உயிரோடு விளையாடும் செயலன்றி வேறில்லை. இது சம்பந்தமாக மாநில கல்வியாளர்கள் சங்கம் சார்பில் சம்பந்தப்பட்ட கல்வி பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு தகவல் தெரிவித்தோம் தொடர்ந்து இதுபோன்று ஒரே வகுப்பில் அதிக ஆசிரியர்களை வைத்து பயிற்சி என்பது கொராண தொற்று வேகமாக பரவி வரும் காலத்தில் அரசு நோக்கத்தில் பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.ஆகவே இதில் உடனடியாகப் பள்ளிக்கல்வி அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, பயிற்சியினை ஒத்திவைத்து, தக்க ஏற்பாடுகள் செய்து, பின்பு பயிற்சிக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்  தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget