மேலும் அறிய

தஞ்சாவூர்: சுவாமி மலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கோலாகலம்

’’நவம்பர் 9 ஆம் தேதி சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேகமும், அன்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது’’

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில்முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை  வீடாகத் திகழ்கின்றது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளி உள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர். ஒம் எனும் பிரணவ மநதிரத்தை தந்தையான சிவபெருமானுக்கு, மகனாகிய முருகன் உபதேசம் செய்த தலம் என்பதால், முருகப்பெருமான் இக்கோயிலில் தகப்பன்சுவாமி எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால், இக்கோயில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது.

தஞ்சாவூர்: சுவாமி மலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கோலாகலம்

முருகனின் அறுபடைவீடுகளில் இதுவும் ஒன்றாகும். தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருள் துறை பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் மற்றும் நக்கீரர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் திருமுறையில் உள்ளன. கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலையுடன் கூடிய இராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. இத்தலத்தின் தல மரம் நெல்லி மரமாகும். முருகன் சன்னதிக்குச் செல்ல தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் கொடி மரத்தின் அருகே கண்கொடுத்த விநாயகரான நேத்திர விநாயகர் உள்ளார். உள் சுற்றில் தல விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சரஸ்வதி, நாரதர், வீரபாகு, அகத்தியர், அருணகிரிநாதர் ஆகியோர் சிலைகள் உள்ளன. சுவாமிநாதசுவாமியின் சன்னதிக்கு எதிராக மயிலுக்குப் பதிலாக யானை வாகனம் உள்ளது. இது இந்திரன் அளித்ததாகும். கருவறையில் முருகன் வலது கரத்தில் தண்டம் ஏந்தியபடி ஊறு முத்திரையில் நின்ற நிலையில் அருள் பாலிக்கின்றார்.

தஞ்சாவூர்: சுவாமி மலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கோலாகலம்

இத்தகைய சிறப்புடைய சுவாமிநாத சுவாமிக்கு கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதன் தொடக்க  நிகழ்வாக சண்முக சுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோயிலில் இருந்து படி இறங்கி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது. இரவு படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

தொடர்ந்து விழா நாட்களில் காலை, மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி உள்பிரகாரத்தில் மட்டுமே புறப்பாடு நடைபெறுகிறது. நவம்பர் 9 ஆம் தேதி சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேகமும், அன்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து அன்று  சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோயில் உள் பிரகாரத்தில் கொரோனா வழிகாட்டுதலுடன் நடைபெறவுள்ளது. பின்னர் 10 ஆம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள், உபயதாரர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Google Search 2024: கதறிய கூகுள்- மாங்காய் ஊறுகாய், ஹனுமன், ஹர்திக் என தேடி திரிந்த இந்தியர்கள் - பிரதமர் மோடி எங்கப்பா?

School Leave: மாணவர்களே..!  ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு

Paracetamol: என்னயா சொல்றீங்க..! ”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

TN Govt CAG Report: இதுதான் சமூகநீதியா முதல்வரே..! தவிக்கும் மக்கள், செலவழிக்கப்படாத ரூ.1,000 கோடி, பட்டியலினத்தின் வளர்ச்சி எங்கே?

ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Google Search 2024: கதறிய கூகுள்- மாங்காய் ஊறுகாய், ஹனுமன், ஹர்திக் என தேடி திரிந்த இந்தியர்கள் - பிரதமர் மோடி எங்கப்பா?
Google Search 2024: கதறிய கூகுள்- மாங்காய் ஊறுகாய், ஹனுமன், ஹர்திக் என தேடி திரிந்த இந்தியர்கள் - பிரதமர் மோடி எங்கப்பா?
School Leave: மாணவர்களே..!  ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு
School Leave: மாணவர்களே..! ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு
Paracetamol: என்னயா சொல்றீங்க..! ”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
Paracetamol: என்னயா சொல்றீங்க..! ”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
TN Govt CAG Report: இதுதான் சமூகநீதியா முதல்வரே..! தவிக்கும் மக்கள், செலவழிக்கப்படாத ரூ.1,000 கோடி, பட்டியலினத்தின் வளர்ச்சி எங்கே?
TN Govt CAG Report: இதுதான் சமூகநீதியா முதல்வரே..! தவிக்கும் மக்கள், செலவழிக்கப்படாத ரூ.1,000 கோடி, பட்டியலினத்தின் வளர்ச்சி எங்கே?
Ajith:  ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!

TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு

வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!

TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்

Embed widget