மேலும் அறிய

தஞ்சையில் நெல் கொள்முதலில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் நகல் எரிப்பு போராட்டம்

தமிழக அரசு இதனை இப்போராட்டத்தை பதிவு செய்து, டெல்லியிலுள்ள மத்திய அரசுக்கு, தமிழகத்திற்கு இது பொருந்தாது, நெல்லை நேரடியாக கொள் முதல் செய்கின்றோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்ல வேண்டும்.

நெல் கொள்முதலில் விவசாயிகளை பாதிக்கும் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் அரசாணை நகலை காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று தஞ்சையில்  எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை வகித்தார்.


தஞ்சையில் நெல் கொள்முதலில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் நகல் எரிப்பு போராட்டம்

போராட்டத்தின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் செயல்படும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய அரசு ஆன்-லைன் பதிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் உரிய நேரத்தில் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே ஆன்-லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஆன்-லைன் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் அரசாணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கலந்து கொண்டு கைதாகினர்.


தஞ்சையில் நெல் கொள்முதலில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் நகல் எரிப்பு போராட்டம்

காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் நிருபர்களிடம் கூறுகையில்,இணையதளத்தில் முன் பதிவு செய்து,அவர்கள் குறிப்பிட கூடிய நாளில் அவர்கள் குறிப்பிடம் கொள் முதல் நிலையத்தில் நெல்லை விவசாயிகள் கொண்டு போய் விற்பனை செய்ய வேண்டும் என்று கொண்டு வந்திருக்கின்ற இந்த ஏற்பாடு, இந்திய அரசின் ஏற்பாடு, தமிழக அரசு அதனை செயல்படுத்துகின்றது. இது விவசாயிகளுக்கு பெரும் சுமையாக இருக்கின்றது.விவசாயிகள் இதற்கு அஞ்சி, தனியாரிடம் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்ககூடிய அவலம் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றது. கொள்முதலின் கொள்கையே தோற்று போய் விட்டது. இந்த கொள் முதல் கொள்கை தோற்கடித்தது ஆட்சியாளர்கள் தான்.


தஞ்சையில் நெல் கொள்முதலில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் நகல் எரிப்பு போராட்டம்

துன்பம் தாங்காமல் தனியாரிடம் விற்பனை செய்வது, அங்கு இங்கு கடன்களை வாங்கி விவசாயம் செய்து விஏஒவிடம் பதிவு செய்து, அவர்கள் சொன்ன தேதியில் போக முடியாவிட்டால், இந்த நெல்லை எங்கு வைத்திருக்க முடியும். உடனடியாக இணையதள பதிவு என்ற கொடூர விதிமுறைகளை நீக்கி, கடந்த காலங்களில் இருந்தது போல் நேரடி நெல் கொள் முதல் செய்ய வேண்டும். அதற்கு ஊழியர் பற்றாகுறை இருக்கின்றத என்றால், புதியதாக அதிக ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி நகலை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே, தமிழக அரசு இதனை இப்போராட்டத்தை பதிவு செய்து, டெல்லியிலுள்ள மத்திய அரசுக்கு, தமிழகத்திற்கு இது பொருந்தாது, நெல்லை நேரடியாக கொள் முதல் செய்கின்றோம்  என தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்ல வேண்டும். அதனை தமிழக அரசு செயல்படுத்திட வேண்டும் என்றார்.

தலைப்பு செய்திகள்

அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget