மேலும் அறிய

உனக்காச்சு... எனக்காச்சு...திருடனுடன் மல்லுக்கட்டு - நடந்தது என்ன?

தஞ்சையில் செல்போனை வாலிபரிடம் இருந்து பறிக்கும் போது அவர் விடாமல் சட்டையை கோர்த்து பிடித்து மல்லுக்கட்டு நடத்த, துண்டை காணோம் டி சர்ட்டை காணோம் என்று டி சர்ட்டை கழற்றி விட்டு எஸ்கேப் ஆன செல்போன் திருடன்.

தஞ்சாவூர்: தஞ்சையில் செல்போனை வாலிபரிடம் இருந்து பறிக்கும் போது அவர் விடாமல் சட்டையை கோர்த்து பிடித்து மல்லுக்கட்டு நடத்த, துண்டை காணோம் டி சர்ட்டை காணோம் என்று டி சர்ட்டை கழற்றி விட்டு எஸ்கேப் ஆன செல்போன் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர் புகார் கொடுப்பதற்கு முன்பே போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நடந்துக்கிட்டே செல்போன் பார்தது வந்தது தப்பா?

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே ஒரு சந்தில் அன்வர் என்பவர் தனது செல்போனை கையில் வைத்து கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு பைக்கில் வந்த இருவர் அன்வர் அருகில் வந்து நிறுத்தினர்.  பைக்கை ஓட்டி வந்த வாலிபர் பைக்கிலிருந்து இறங்கி அன்வர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்தார். மற்றொரு வாலிபர் பைக்கை ரெடியாக வைத்திருப்பதை கண்ட அன்வர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு தன்னிடம் இருந்து செல்போனை பறித்த வாலிபரின் டி ஷர்டை இழுத்து பிடிக்க இருவரும் மல்லுக்கட்டினர்.

உனக்காச்சு... எனக்காச்சு...திருடனுடன் மல்லுக்கட்டு -  நடந்தது என்ன?

பிடியை விடாமல் திருடனை இழுத்து பிடித்தார்

இருப்பினும் அன்வர் தன் பிடியை விடாமல் பிடித்து இழுக்கவே சட்டென்று செல்போனை பறித்த வாலிபர் தன் டீ சர்ட்டை கழற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவங்கள் அருகில் இருந்த வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவானது.
இந்த மல்லுக்கட்டு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து உடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தங்களின் விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி கேமராவில் பதிவானதை வைத்து விசாரணை

சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த வண்டி எண்ணை வைத்து தீவிர விசாரணையில் போலீசார் இறங்க, இக்குற்றச் செயலில் ஈடுபட்டது மேலவீதியை சேர்ந்த பிரவீன் (24) மற்றும் வடக்கு அலங்கத்தை சேர்ந்த பாலாஜி (29) என்று தெரிய வந்தது. இதையடுத்து பாலாஜியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து அன்வரின் செல்போன் மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் தலைமறைவான பிரவீனை போலீசார் தேடிவருகின்றனர். 

உனக்காச்சு... எனக்காச்சு...திருடனுடன் மல்லுக்கட்டு -  நடந்தது என்ன?

புகார் வருவதற்கு முன்பே நடவடிக்கை

இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம் செல்போனை பறி கொடுத்த அன்வர் புகார் கொடுப்பதற்கு முன்பே தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட தஞ்சை நகர டி.எஸ்.பி., சோமசுந்தரம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையிலான தனிப்படை போலீசாரை தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் வெகுவாக பாராட்டினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget