மேலும் அறிய

"எங்க கூட்டணி செம ஸ்ட்ராங்க்..." - சொன்னது யார் தெரியுங்களா?

தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது.

தஞ்சாவூர்: எங்கள் கூட்டணி செம வலிமையானது என்று சட்டமன்ற தேர்தல் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
 
தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் ஆகியோர் தலைமை வகித்தனர். மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரன்,  எம்.எல்.ஏ., டி.கே.ஜி. நீலமேகம், உயர்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மகேஷ் கிருஷ்ணசாமி, ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, மாவட்ட அவைத்தலைவர் இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அனைவருடனும் தொகுதி வாரியாக எந்தெந்த பகுதிகளில் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும். தொகுதி நிலவரம் எப்படி உள்ளது? மக்களின் மனநிலை என்ன? என்பவை குறித்து அமைசசர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார். 

கூட்டத்திற்கு பின் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:- தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 2026 தேர்தல் குறித்து நிர்வாகிகளை சந்திப்பதற்காக வந்துள்ளேன். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி இந்த ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அனைவரும் எந்தெந்த பகுதியில் என்ன பணிகள் செய்ய வேண்டும். தொகுதி நிலவரம் எப்படி உள்ளது. மக்கள் மனநிலை எப்படி உள்ளது என்பதை தெரிவித்துள்ளனர். மேலும் அரசு சார்பில் செய்யக்கூடிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை எவ்வித பிரச்சினையும் இல்லை‌. அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம். 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் தி.மு.க. அரசின் திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவதை முதல்வர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். பெண்கள் மத்தியில் தி.மு.க. அரசின் திட்டங்கள் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. மக்கள் தி.மு.க. பக்கம் தான் இருப்பார்கள். எங்கள் கூட்டணி எப்போதும் சிறப்பான கூட்டணி. இதில் எவ்வித மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget