மேலும் அறிய

தஞ்சை அருகே நம் முன்னோர்களால் தொலைநோக்கு பார்வையுடன் கட்டப்பட்ட செங்கல் நெற்களஞ்சியம்

தமிழர்களின் பெருமையும், அவர்களின் நுணுக்கமான செயல்திறனும் இன்றும் உலகளவில் வியந்து பார்க்க வைத்துக் கொண்டே இருக்க செய்கிறது.

தஞ்சாவூர்: தமிழர்களின் பெருமையும், அவர்களின் நுணுக்கமான செயல்திறனும் இன்றும் உலகளவில் வியந்து பார்க்க வைத்துக் கொண்டே இருக்க செய்கிறது. தொலை நோக்கு பார்வையுடன் செய்த பல்வேறு செயல்கள் இன்றும் காலம் கடந்தும் கம்பீரமாக உள்ளன. அந்த வகையில் தஞ்சை அருகே நெல் சேமிக்கும் செங்கல் நெற்களஞ்சியம் விளங்குகிறது.

அழகு மிளிரும் தெருக்கள்... கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் இல்லங்கள், செங்கல் வைத்தும் சிறப்பு காட்டி கட்டிடக்கலையில் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களே நம் முன்னோர்கள். கைத்திறன் கொண்டு கட்டிடத்தை அழகுற மிளர வைத்து அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்த திறமைசாலி தமிழர்கள் என்றால் மிகையில்லை. அன்றல்ல... இன்றல்ல... என்றும் வலிமையான, வலுவான கட்டிடக்கலைக்கு நம் தமிழர்களே அஸ்திவாரம்.

ஆயிரம் அல்ல அதற்கு மேலும், இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் கம்பீரத்துடன் காட்சி கொடுக்கும் கட்டிடங்கள் இப்போதும் காண கிடைக்கும் அதிசயங்களே. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயிலில் உள்ள  ஆசியாவிலேயே பெரிய நெற்களஞ்சியம் உதாரணமாக உள்ளது.

தஞ்சை அருகே நம் முன்னோர்களால் தொலைநோக்கு பார்வையுடன் கட்டப்பட்ட செங்கல் நெற்களஞ்சியம்

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் அமைந்துள்ளது பாலைவனநாதர் கோயில். இக்கோயிலின் உள்புறம் ராஜகோபுரத்திற்கு வடபுறத்தில் செங்கல் நெற்களஞ்சியம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த நெற்களஞ்சியம் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்கர் காலத்தில், அமைச்சர் கோவிந்த தீட்சிதரால் 1640 ம் ஆண்டு கட்டப்பட்டது. மிக சீரிய தொலைநோக்கு பார்வையுடன் கட்டப்பட்டுள்ளது என்றே கூறலாம். முற்றிலும் செங்கல், சுண்ணாம்பு கலவை கொண்டு கட்டப்பட்ட இந்த நெற்களஞ்சியம் சுமார் 35 அடி உயரமும், 80 அடி சுற்றளவும் கொண்டது.

எத்தனையோ கடும் வெயிலையும், கனமழையையும், இயற்கை இடர்பாடுகளையும் தாங்கி வெற்றிச்சின்னமாக நிற்கிறது இந்த நெற் களஞ்சியம். சுமார் 12 ஆயிரம் களம் தானியத்தை சேமித்து வைக்கலாம் இதனுள் என்றால் பிரமிப்பு ஏற்படுகிறது அல்லவா. சுமார் 3 ஆயிரம் டன் வரையிலான நெல்லை இந்த குதிரில் சேமிக்கலாம். அந்தளவிற்கு கொள்ளளவு உடையது. நெற்களஞ்சியத்தின் மேல்புறம் கூம்பு வடிவத்திலும், கீழே வட்ட வடிவிலும் அமைத்துள்ளனர் நம் முன்னோர்கள். நாட்டில் வறட்சி நிலவிய காலத்திலும், கொடும் பஞ்சம் தலைவிரித்தாடிய கால கட்டத்திலும் நெல்லை வாரி வழங்கி மக்களின் பஞ்சத்தை போக்கிய சிறப்பு இந்த நெற்களஞ்சியத்திற்கு உண்டு.

இதனுள் வைக்கப்படும் தானியங்கள் பல ஆண்டுகளுக்கு கெட்டு போகாமல் இருக்கும் வகையில் சிறந்த தொழிற்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. தானியங்களை உள்ளே கொட்ட வேண்டுமா? வெளியே எடுக்க வேண்டுமா. அதற்கென்றே மேலிருந்து கீழாக மூன்று வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நெற்களஞ்சியம் ஆசியாவிலேயே பெரிய நெற்களஞ்சியம் என்கின்றனர். தமிழக அரசு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நெற்களஞ்சியம் நம் முன்னோர்களின் பெருமையை பறைச்சாற்றும் உதாரணங்களில் ஒன்று என்றால் மிகையில்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget