மேலும் அறிய

தஞ்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம்

இதுவரை உதவிகள் பெறாதவர்களுக்காக முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு முகாம் நடைபெற உள்ளது. இதில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு வகையிலும் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. செயற்கை கால், மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், ஊன்றுகோல், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலி, ரோலேட்டர் என்று பல்வேறு வகையிலும் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இதுவரை உதவிகள் பெறாதவர்களுக்காக முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான கருவிகள் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.  

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் NIEPMD நிறுவனம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பயனாளிகள் தேர்வு செய்வதற்கான மதிப்பீட்டு முகாம் 4 இடங்களில் நடைபெற உள்ளது.

சென்னை முட்டுகாடு பகுதியில் செயல்பட்டு தேசிய பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கான (NIEPMD) நிறுவனத்திருந்து உபகரணங்கள் தேர்வு செய்வதற்கான குழுக்கள் முகாமில் கலந்து கொண்டு பயனாளிகளை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாம்களில் முட நீக்கு சாதனம், செயற்கை கால், மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், ஊன்றுகோல், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலி, ரோலேட்டர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பயிற்சி சாதனம் (TLM Kit) பார்வையற்றோருக்கு பிரெய்லி வாட்ச், பிரெய்சி சிலேட், டெய்சி பிளேயர், மற்றும் காதொலி கருவி, போன்ற உபகரணங்களில் அவர்களின் தகுதிக்கேற்ப தேர்வு செய்து வழங்கப்பட உள்ளது.

நாளை 26ம் தேதி திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை வீர சோழன் கோசி மணிமண்டப வளாகம், 27ம் தேதி கும்பகோணம் சங்கமம் மஹால் இரங்கா நகர் சாக்கோட்டை, 28ம் தேதி பட்டுக்கோட்டை வடச்சேரி ரோடு பகுதியில் உள்ள திரிஸ்டார் திருமண மஹாலில் நடைபெற உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், ஆதார் அட்டை நகல் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், UDID கார்டு நகல், கை பேசி எண், வருமானச்சான்று மற்றும் இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் முகாம் பற்றிய தகவல் 04362-236791 என்ற தொலை பேசி எண்ணில் தகவல் பெறலாம்.

எனவே தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த உபகரணங்கள் தேவைப்படும் மனவளர்ச்சி குன்றிய, பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட, கால் பாதிக்கப்பட்ட செவித்திறன் பாதிக்கப்பட்ட உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் மதிப்பீட்டு முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கு தேவைப்படும் உதவி உபகரணம் குறித்து பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  இவ்வாறு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
தஞ்சாவூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி: மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
தஞ்சாவூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி: மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை இஃப்தார் கொண்டாட்டம்: 2000 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை இஃப்தார் கொண்டாட்டம்: 2000 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Embed widget