மேலும் அறிய

2 நாட்கள் விடுமுறைக்குப் பின் என்ன நடக்கும்? தேர்தல் களம் சூடுபிடிக்குமா?

இன்று மகாவீரர் ஜெயந்தி, 1ம் தேதி வங்கி விடுமுறை, 3ம் தேதி புனித வெள்ளி, 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என நான்கு அரசு விடுமுறை தினங்களை தவிர்த்து மற்ற 4 நாட்களில் வேட்பு மனுதாக்கல் செய்யலாம்

தஞ்சாவூர்: தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் 2ம் தேதி வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். இதை ஒட்டி தஞ்சை கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கின. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

வேலை நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் . வரும் 6ம் தேதி வரை மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இன்று மகாவீரர் ஜெயந்தி, 1ம் தேதி வங்கி விடுமுறை, 3ம் தேதி புனித வெள்ளி, 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என நான்கு அரசு விடுமுறை தினங்களை தவிர்த்து மற்ற 4 நாட்களில் வரையறுக்கப்பட்ட நேரங்களில் வேட்பு மனுதாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணத்தில் கோட்டாட்சியர் வருவாய் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், ஒரத்தநாடு, திருவையாறு, திருவிடைமருதூர், பேராவூரணி, பாபநாசம் ஆகிய இடங்களில் உள்ள தாசில்தார் அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இதனை முன்னிட்டு கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்கு முன்பாக வேட்பாளரின் ஆதாரவாளர்கள் நிறுத்தப்பட்டனர். வாகனங்களும் அங்கேயே நிறுத்தப்பட்டன. வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யும் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர் .

மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தந்த அலுவலகங்களில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் நேற்று மனுதாக்கல் செய்தனர். இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் மீண்டும் 2ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்யப்படும். மனுதாக்கல் தொடங்கியதை முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்கள்: தஞ்சாவூர் அருகே மனதைக் கொள்ளைக் கொள்ளும் இயற்கை எழில்!
பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்கள்: தஞ்சாவூர் அருகே மனதைக் கொள்ளைக் கொள்ளும் இயற்கை எழில்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget