மேலும் அறிய

சிறுவர்களை கொத்தடிமைகளாக விலைக்கு வாங்கி ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தியவர் கைது

’’போக்சோ சட்ட உள்ளிட்ட மூன்று பிரிவின்  கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறுவர்களை விலைக்கு வாங்கிய கோவிந்தராஜை கைது செய்தனர்’’

பத்து வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்களை ஆண்டுக்கு 62,000 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி அந்நால்வரையும் கடந்த 2 ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் தொழிலில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்திய இராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (49) என்ற ஆடு வளர்க்கும் இடையரை தஞ்சாவூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் அருகேயுள்ள வல்லம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ்-பாப்பாத்தி தம்பதியினரின் மகன்களான ராஜா (9), ரவி (8),  ராமு (7),  சோமு (6) ஆகிய 4 சிறுவர்களை ராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் அச்சிறுவர்களின் பெற்றோர்களிடம் ஆண்டுக்கு 62,000 கொடுத்து விலைக்கு வாங்கி ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.

சிறுவர்களை கொத்தடிமைகளாக விலைக்கு வாங்கி ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தியவர் கைது

இந்நிலையில் டிசம்பர் 5 ஆம் தேதி சூரக்கோட்டை கிராமம் பரிசுத்தம் ஜேம்ஸ் நகரில் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் ராஜா,  ரவி ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவந்து தஞ்சாவூர் புறவழிச்சாலை மன்னார்குடி பிரிவு சாலையில் வழிப்போக்கர் ஒருவரின் உதவியுடன் சைல்டு லைன் அமைப்பினருக்கு 1098 இலவச தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து,  சைல்டு லைன் அமைப்பை சேர்ந்த அன்புமணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு புற தொடர்பு பணியாளர் திணேஷ்குமார் மற்றும் தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலைய போலீசார் ஆகியோம் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் நின்றிருந்த சிறுவர்களை மீட்டனர். பின்னர் தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலைய போலீசாரின் உதவியுடன் மீட்டனர்.

சிறுவர்களை கொத்தடிமைகளாக விலைக்கு வாங்கி ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தியவர் கைது

அச்சிறுவர்கள் கொடுத்த தகவலின்பேரில்,  மற்றொரு இடத்தில் கொத்தடிமைகளாக ஆடுமேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுவந்த அவர்களது சகோதரர்கள் ராமு, சோமு ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர்.மீட்கப்பட்ட 4 சிறுவர்களும் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் மு.ரஞ்சித் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர்.இராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், அச் சிறுவர்களின் பெற்றோரிடம்  சிறுவர்கள் ராஜா,  ரவி  ஆகியோருக்கு ஆண்டுக்கு தலா ரூ.25, 000 வீதமும்,  ராமு,  சோமு ஆகியோருக்கு ஆண்டுக்கு தலா ரூ. 6,000 வீதமும் என மொத்தம் ரூ.62 ஆயிரம் விலை கொடுத்து வாங்கி அந்நான்கு சிறுவர்களையும் ஆடு மேய்க்கும் தொழிலில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தி வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

சிறுவர்களை கொத்தடிமைகளாக விலைக்கு வாங்கி ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தியவர் கைது

காணாமல் போனதாக கருதப்பட்ட பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஐம்பொன்சிலை கண்டுபிடிப்பு

இதை தொடர்ந்து,  வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவின்பேரில், அச்சிறுவர்கள் நால்வரும் கொத்தடிமை தொழிலாளர் முறையில் இருந்து விடுவிக்கப்பட்டு,  மாவட்ட குழந்தைகள் நல அலுவரின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டு,  அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில்,  சூரக்கோட்டை வருவாய் நிர்வாக அலுவலர் சங்கீதா அளித்த புகரின்பேரில்,  தஞ்சாவூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்ட உள்ளிட்ட மூன்று பிரிவின்  கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறுவர்களை விலைக்கு வாங்கிய கோவிந்தராஜை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

75 ஆண்டுகளாக குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget