மேலும் அறிய

வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் பாஜக நிர்வாகி சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்

தஞ்சாவூர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் முரளிதரன் என்பவர் தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து வேட்புமனுவை சுயேட்சையாக தாக்கல் செய்தார். ‌

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையே இருந்து வருகிறது. இந்நிலையில், பாஜக நிர்வாகி சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் தஞ்சாவூர் தொகுதியை தவிர மற்ற 7 தொகுதிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு செய்யப்பட்டனர். வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வது, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது போன்றவற்றில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சாவூர் தொகுதியை புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாஜகவைச் சேர்ந்தவர்களும் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த 30ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் முரளிதரன் என்பவர் தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து வேட்புமனுவை சுயேட்சையாக தாக்கல் செய்தார். ‌பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், தஞ்சாவூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பாஜக தான் போட்டியிட வேண்டும், வேறு கட்சிக்கு தொகுதியை தாரை வார்க்கக் கூடாது. எனது ராசிப்படி நல்ல நாள் என்பதால் நான் சுயேட்சையாக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளேன். பாஜகவுக்கு இந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் பாஜக நிர்வாகி ஒருவர் தன்னிச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தலைப்பு செய்திகள்

8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்கள்: தஞ்சாவூர் அருகே மனதைக் கொள்ளைக் கொள்ளும் இயற்கை எழில்!
பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்கள்: தஞ்சாவூர் அருகே மனதைக் கொள்ளைக் கொள்ளும் இயற்கை எழில்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget