மேலும் அறிய
Advertisement
தமிழக அரசின் மழை நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை - கீழ்வெண்மணியில் பாலகிருஷ்ணன் பேட்டி
’’அரசுடன் கூட்டணியாக இருந்தாலும், மக்கள் பாதிக்கப்படுவார்கள் ஆனால் மக்கள் பக்கம் நின்று எப்போதும் உரிமைக்காக போராட்டம் நடத்துவோம்'’
நிலப்பிரபுக்களிடம் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டு நடைபெற்ற நடந்த போராட்டத்தில் நிலப்பிரபுக்கள் மற்றும் அவரது ஆட்கள்1968 ஆம் ஆண்டு கீழ வெண்மணி கிராமத்தில் தாக்குதல் நடத்தினர் அப்போது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ராமைய்யாவின் குடிசையில் 44 பேர் தஞ்சம் புகுந்தனர் அவர்களை குடிசையில் வைத்து உயிரோடு எரித்து கொல்லப்பட்ட வெண்மணி தியாகிகள் 53 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கீழ வெண்மணி கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட வெண்மணி தியாகிகள் நினைவக கட்டிடத்தை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். திறந்து வைத்தார்.
தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ள கல் வெட்டினை ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், செங்கொடியை ஏற்றி வைத்து, நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர் சௌந்தரராஜன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, சிபிஐ தேசிய குழு உறுப்பினர் பழனிச்சாமி கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து மற்றும் திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி ,மதுரை, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வாகனங்கள் மூலம் இங்கு வந்து மலர் வளையத்தை கையில் ஏந்தி ஊர்வலமாக வீரவணக்க முழக்கங்களை எழுப்பிய படி ராமைய்யாவின் குடிசையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் மண்டபத்திலுள்ள ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்கள் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், எதிர்கட்சியினர் கோரிக்கையை ஏற்காமல், அவசர அவசரமாக தேர்தல் சீர்திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கு திருத்தங்களை கூட கொடுக்க அனுமதிக்க வில்லை. இது ஜனநாயகத்தை சீரழிக்கும் நோக்கம். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையின் எதிர்த்து சிறு, குறு தொழில் முனைவோர், வங்கி ஊழியர்கள் போராடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக வருகிற பிப்ரவரி 23, 24 ஆகிய 2 நாட்கள் அதில இந்திய தொழிற் சங்கத்தினர் நாடு முழுவதும் பெரும் போராட்டத்தை நடத்த உள்ளனர். மழை வெள்ளப் பாதிப்பு களுக்கு தமிழக முதலமைச்சர் அறிவித்த நிவாரணம் போதுமானதாக இல்லை. இதனை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். மத்திய அரசிடம் நிதியை கேட்டுப் பெற்று, மாநில அரசு வெள்ளம் பாதித்த அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் நியமிக்க வேண்டும். அப்போதுதான் குழந்தை உரிமைகள் ஆணையம் முழுமையாக செயல்படும். மூடப்பட்டுள்ள அலங்காநல்லூர், ஆம்பூர் சர்க்கரை ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும். அரசுடன் கூட்டணியாக இருந்தாலும், மக்கள் பாதிக்கப்படுவார்கள் ஆனால் மக்கள் பக்கம் நின்று எப்போதும் உரிமைக்காக போராட்டம் நடத்துவோம். கூட்டணியில் இருக்கிறோம் என்கிற சமரசம் கிடையாது. பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும். வழங்கவில்லை என்றால் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். தமிழக அரசு கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துவோம் என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion