கையை சாயத்தில் நனைத்து மூவர்ண தேசிய கொடியை ஓவியம் வரைந்து மாணவர் சாதனை!
மயிலாடுதுறையில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தனியார் பள்ளி மாணவர் 600 சதுரஅடி அளவில் தன் கைப்பதிபால் மூவர்ண தேசிய கொடியை ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.
நாடு முழுவதும் 75ஆவது சுதந்திர தின விழா நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மறையூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஹர்ஷித், 75 வது சுதந்திர தினத்தில் சாதனை படைக்க வேண்டுமென்ற நோக்கில் வெர்ட்ச்யூ புக் ஆப் வேல்டு ரேக்கார்டு அமைப்பினர் முன்னிலையில் 600 சதுர அடி பரப்பளவு உள்ள திரையில் இந்திய நாட்டின் தேசிய மூவர்ணக்கொடியை கைபதிப்பு ஓவியமாக வரைந்து சாதனை படைத்துள்ளார்.
அக்ரலிக் பெயிண்டால், 3 மணிநேரம் 15 நிமிடம் 31 விநாடிகளில் 4 ஆயிரத்து 440 தடவை தன் கைரேகைப்பதிப்பின் மூலம் மூன்று வர்ணங்களில் தேசிய கொடியை வரைந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்திய மாணவருக்கு வேல்டு ரேக்கார்டு அமைப்பின் இயக்குனர் சுரேஷ்குமார் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினர். பள்ளியில் சேர்ந்தபோது மாணவனின் பெற்றோர் மூவர்ணக்கொடியை நெற்றியில் திலகமிட்டுள்ளனர். சுதந்திர தினத்தை பற்றி தெரிந்து கொண்ட மாணவன் அன்று முதல் மூவர்ண தேசிய கொடியை தினந்தோறும் நெற்றியில் திலகமிட்டு வருவதாகவும், சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்தால் இந்த சாதணை முயற்சியை மேற்கொண்டதாகவும் தனக்கு பாரதபிரதமர் ஆக வேண்டும் என்பதே என் லட்சியம் என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சுதந்திரம் பெற்றவுடன், டெல்லி செங்கோட்டையில் பட்டொளி வீசி பறந்த முதல் தேசிய கொடி வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்டது. இந்தியா சுதந்திர தினவிழா கொண்டாட்டங்களுக்கு, தேசிய கொடியை ஏற்ற அதிகளவிலான கொடடிகள் தேவைப்பட்டது. இதனால் பல்வேறு நிறுவனங்களில், தேசிய கொடி தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனுாரை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர், இந்துஸ்தான் லுங்கி கம்பெனி நடத்தி வந்தார்.
அவரும், அவரது மனைவி முனிரத்தினம் அம்மாளும் இணைந்து, இரண்டு கோடி கொடியை கைத்தறியில் நெசவு செய்து டில்லிக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் தயாரித்து அனுப்பிய கொடிதான், சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்ற அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்டது. 1947 ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் முதல் தேசிய கொடியாக அது ஏற்றப்பட்டது. கொடியை சிறப்பாக தயாரித்ததற்காக, அப்போதைய பிரதமர் நேரு பாராட்டி கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தை, அவரது குடும்பத்தினர் இன்றளவும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகின்றனர். இத்தகைய பெருமைமிக்க தேசிய பாட்டு வழக்கும் தேசிய கொடியின் மூலம் சாதனை படைக்க விரும்பும் இச்சிறுவன் இந்த ஓவிய சாதனையை வெகுவாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.