மேலும் அறிய
Advertisement
’தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் அதிகரிப்பு’ - ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடனடியாக பிரதமரிடம் பேசுவார் எச்சரிக்கை விடுப்பார் ஆறுதல் கூறுவார்- ஓ.எஸ்.மணியன்
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலை தடுத்து நிறுத்த மாநில அரசு குரல் கொடுக்கவில்லை, ஆறுதல் சொல்லவல்லை மீன்வளத்துறை அமைச்சர் தன் துறையில நடக்கும் இந்த சம்பவத்திற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றம்சாட்டி உள்ளார். வேதாரண்யம் அருகே ஆற்காட்டுதுறை யிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தந்தை மற்றும் இரு மகன்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற் கொள்ளையர்கள் கடலில் சுற்றிவளைத்து செல்போன், வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருள்களை தரும்படி ஆயுதங்களை காட்டி மிரட்டி கேட்டபோது தரமறுத்த மீனவர்களை சரமாரியாக இரும்பு பைப்பால் தாக்கி தந்தை மற்றும் சகோதரர் கண்முன்னே சிவக்குமாரை அரிவாளால் தலையில் மூன்று இடங்களில் கடுமையாக வெட்டியவர்கள் 4 லட்சம் மதிப்பிலான வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பரித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து 25 தேதி வேதாரணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் கடலில் அச்சமின்றி மீன்பிடி தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ஆற்காடு துறை மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர்களுக்கு ஆதரவாக கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட 27 கிராமத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான மீனவர்கள் வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு அங்கு கோரிக்கை மனுவையும் அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஆற்காட்டுதுறை மீனவர்கள் 4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். போராட்டம் நடத்தியதன் காரணமாக அனுமதியின்றி போராட்டம் நடத்துதல், கூட்டம் கூடுதல், தொற்றுநோயை பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். காவல்துறையினர்.
இதேபோல், நடுக்கடலில் ஆறுகாட்டுத்துறை மீனவர்களை அரிவாள், கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்திய அடையாளம் தெரியாத 10 இலங்கை மீனவர்கள் மீது வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் மீனவர்களின் புகாரின் பேரில் கொடிய ஆயுதத்தை பயன்படுத்தி தாக்கி கொள்ளையடித்ததாக மூன்று படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 10 மீனவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 397 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
இந்த நிலையில் இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டு துறையை சேர்ந்த மீனவர் சிவக்குமாரை முன்னாள் அமைச்சரும்,வேதாரணியம் சட்டமன்ற உறுப்பினரும், நாகை அதிமுக மாவட்ட செயலாளருமான ஓ.எஸ்.மணியன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் சிவகுமாருக்கு அளித்து வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், இலங்கை கடற் கொள்ளையர்களால் நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர் என்றும். கடந்த 4 ஆண்டு அதிமுக ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் உயிரிழப்பு ஏதும் இல்லாமல் இருந்தது சரித்திர சாதனை என்றும், கடந்த ஒரு மாதமாக மீனவர்களின் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.
மேலும் மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த மாநில அரசு குரல் கொடுக்கவில்லை, பிரதமருக்கும் வெளியுறவுத் துறைக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டிய அவர், மீன்வளத்துறை அமைச்சர் தன் துறையின் கீழ் நடைபெறும் சம்பவத்திற்காக குரல் கொடுத்து ஆறுதல் சொல்லவோ மத்திய அரசை வலியுறுத்தவும் இல்லை அதிமுக ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடனடியாக பிரதமரிடம் பேசுவார் எச்சரிக்கை விடுப்பார் ஆறுதல் கூறுவார் என்று கூறிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தி மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசிடம் மாநில அரசு அழுத்தம் தர வேண்டும் என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
க்ரைம்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion