சீர்காழி அருகே பள்ளி வளாகத்தில் மது அருந்திய கும்பல் - தட்டி கேட்ட இளைஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
சீர்காழி அருகே பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்திய இளைஞர்களை தட்டி நபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழியை அடுத்த கொண்டல் கிராமத்தில் அரசு பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களை தட்டி கேட்ட இளைஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொண்டல் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் இவர் தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து ஒரு மாதம் காலம் ஆகிறது. இந்நிலையில், பூபாலன் வீட்டின் அருகே உள்ள அரசினர் உயர்நிலை பள்ளி வளாகத்தில் பக்கத்து கிராமமான வள்ளுவகுடியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட மூன்று பேர் மது அருந்தி உள்ளனர்.
இதனைக் கண்ட பூபாலன் குழந்தைகள் பயிலும் பள்ளிக்கூடத்திலையா? அமர்ந்து மது அருந்துவீர்கள் என தட்டி கேட்டுள்ளார். இதனை அடுத்து பூபாலனிடம் மது அருந்திய நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த பூபாலனை வழிமறித்து பிரச்சனையில் ஈடுபட்டு உன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி உன்னை கொன்று விடுவோம் என கொலை மிரட்டலும் விழித்துள்ளனர்.
இது தொடர்பாக பூபாலன் சீர்காழி காவல் நிலையத்தில் பிரகாஷ் உள்ளிட்ட மிரட்டல் விடுத்த மூன்று நபர்கள் மீது புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட மூன்று பேர் நேற்று இரவு பூபாலன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். அவர்கள் வீசிய பெட்ரோல் அதிர்ஷ்டவசமாக வீட்டின் உள்ளே படாமல் வீட்டின் வெளியே உள்ள சுவற்றின் மீது பட்டதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. மேலும் பெட்ரோல் குண்டு வெடித்ததில் அங்கு இருந்த மரம் ஒன்று பற்றி எரிந்துள்ளது. சத்தம் கேட்டு பூபாலன் குடும்பத்தினர் மட்டும் அக்கம் பக்கத்தினர் வெளியில் வந்து பார்த்தபோது பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதை அதிர்ந்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து பெட்ரோல் குண்டு வீசிய தப்பிச்சென்ற பிரகாஷ் உள்ளிட்ட மூன்று நபர்களை தேடி வருவதுடன், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மது அருந்தியதை தட்டி கேட்ட இளைஞர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்