மேலும் அறிய

Ration Shop: வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் - காரணம் என்ன..?

நியாய விலைக் கடைக்கு வரக்கூடிய பொருட்களும் சரியான எடையில் இருக்க வேண்டும் என்பதை ஏற்க அரசு மறுத்து வருகிறது.

தஞ்சாவூர்:  தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளை வரும் 7ம் தேதி பூட்டிவிட்டு வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கச் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். 

இதுகுறித்து தஞ்சாவூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் 4 துறைகளின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. இதனால், பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

ஒவ்வொரு துறையையும் திருப்திபடுத்த வேண்டிய நிலையில் பணியாளர்கள் உள்ளனர். எனவே, பொது விநியோகத் திட்டத்துக்கு என தனித் துறை உருவாக்கப்பட வேண்டும். நியாய விலைக் கடையிலிருந்து மக்களுக்கு பொருட்கள் செல்லும்போது விற்பனை முனைய கருவியையும், அக்கடையிலுள்ள எடை இயந்திரத்தையும் இணைத்து வழங்கும் முயற்சியை அரசு மேற்கொள்வதை வரவேற்கிறோம்.

அதற்கேற்ப நியாய விலைக் கடைக்கு வரக்கூடிய பொருட்களும் சரியான எடையில் இருக்க வேண்டும் என்பதை ஏற்க அரசு மறுத்து வருகிறது. கிடங்கிலிருந்து நியாய விலைக் கடைக்கு பொருட்கள் வருகிறபோது, அக்கிடங்கில் இருக்கக்கூடிய எடை இயந்திரத்தையும், கணினியையும் இணைத்து சரியான எடையில் பொருட்களைக் கடைக்கு அனுப்ப வேண்டும்.

பணியாளர்களிடம் பிடித்தம் செய்யக்கூடிய தொகைக்கு சரியான வரவு செலவு கணக்கு கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடைகளுக்கு இல்லை. இதில், கோடிக்கணக்கில் மோசடி நிகழ்வதாகக் கருதுகிறோம். இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து வரும்  7ம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து நியாய விலைக் கடைகளையும் பூட்டிவிட்டு, ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து, அனைத்து மாவட்டத் தலைமையிடங்களில் மறியல் போராட்டம் நடத்த தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, நிர்வாகி ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget