மேலும் அறிய

4 வகையான ஆண்டு கணக்கு, தமிழ் எண்ணில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு.: எங்கு தெரியுங்களா?

கல்வெட்டில் தமிழ் எண்களில் சக ஆண்டு, கலியுக ஆண்டு, தமிழ் ஆண்டு, ஆங்கில ஆண்டு ஆகிய நான்கு வகையான ஆண்டு கணக்குகள் குறிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.

தஞ்சாவூர்: பொக்கிஷம் போல் கிடைச்சிருக்கு... புதுக்கோட்டையில், 19ம் நூற்றாண்டில் பயன்பாட்டிலிருந்த நான்கு வகையான ஆண்டு கணக்கு மற்றும் தமிழ் எண்ணில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இது மிகுந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது.

புதுக்கோட்டை நகரில் அமைந்துள்ள நைனாராஜு தண்டாயுதபாணி கோயிலில் பராமரிப்பு பணியின் போது, கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு குறித்து, தகவல் அறிந்த புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அக்கல்வெட்டில் தமிழ் எண்களில் சக ஆண்டு, கலியுக ஆண்டு, தமிழ் ஆண்டு, ஆங்கில ஆண்டு ஆகிய நான்கு வகையான ஆண்டு கணக்குகள் குறிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.

இதுகுறித்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது: கடந்த நுாற்றாண்டு வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் தமிழ் எண்களே பிரதானமாக பயன்பாட்டில் இருந்துள்ளதை, தமிழ் எண் மைல் கற்கள் கண்டுபிடிப்பின் மூலம் உறுதி செய்துள்ளோம். இதற்கு வலுசேர்க்கும் விதத்தில், தண்டாயுதபாணி கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு 1858ம் ஆண்டு வரை, தமிழ் எண்களே பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளதை உறுதி செய்கிறது.

இந்த கல்வெட்டில் தமிழ் எண்களில் சக ஆண்டு, கலியுக ஆண்டு, தமிழ் ஆண்டு, ஆங்கில ஆண்டு ஆகிய நான்கு வகையான ஆண்டு கணக்குகள் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கல்வெட்டில் மன்னரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலத்தில் ராமச்சந்திர தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தான மன்னராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  புதுக்கோட்டை மாவட்டம், பிடாம்பட்டியில் உள்ள சஞ்சீவிராயர் கோயிலில், 220 ஆண்டுகள் பழமையான செப்பேடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுவடி திட்ட பணிக் குழு, சஞ்சீவிராயர் கோயிலில் ஆய்வு செய்தது. அதில், அக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் ரங்கராஜனிடம் இருந்த செப்பேட்டை கண்டறிந்தது. இதுகுறித்து, சுவடித் திட்ட ஒருங்கிணைப்பாளர் தாமரை பாண்டியன் கூறியதாவது:

கோயில் பரம்பரை அறங்காவலர் ரங்கராஜனிடம் இருந்து பெற்ற செப்பேடு, 32 செ.மீ., நீளமும், 22 செ.மீ., அகலமும் உள்ளது. இதன் முன்பகுதியில், 48 வரிகளாகவும், பின்பக்கத்தில் 36 வரிகளாகவும் எழுதப்பட்டுள்ளன. செப்பேட்டின் மத்தியில், தெலுங்கு மொழியில், ‘ஸ்ரீராம ஜெயம்’ என எழுதப்பட்டுள்ளது. இது, 1804ம் ஆண்டு, ஐப்பசி மாதம் 8ம் தேதி எழுதப்பட்டுள்ளது. அதாவது, 220 ஆண்டுகளுக்கு முன், பழனியப்ப வாத்தியார் மகன் வடமலை வாத்தியாரால் எழுதப்பட்டுள்ளது.

ராஜராஜ வளநாட்டில், பண்டி சூழ் நாடு எனும் நிர்வாகப் பிரிவின் கீழ் தெற்குலுார் அமைந்துள்ளது. தெற்குலுாரில் காணியுடைய அரசரான திருமலைராய தொண்டைமானின் பேரனும், திருமலையப்பராய தொண்டைமானின் மகனுமான, ராஜவிஜய ரெகுநாதராய பாதாரத் தொண்டைமான் என்பவர், சஞ்சீவிராயர் சுவாமி கோவிலின் நித்தியப்படி, கட்டளை பூஜை, கோவில் திருப்பணி, அபிஷேகம், நைவேத்தியம், அன்னதானம் உள்ளிட்ட தர்மங்கள் தொடர்ந்து நடக்க, நில தானம் வழங்கி உள்ளார். அந்த நிலம், புதுக்கோட்டை மாவட்டம், குளத்துார் வட்டத்துக்கு உட்பட்ட பிடாம்பட்டியில் உள்ளது. சர்வ மானியமாக வழங்கப்பட்ட இந்த நிலம், வெங்கட்ராம தாசரியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அந்த நிலத்தின் நான்கு புறமும் உள்ள எல்லைகள் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
சாலை விபத்துகளில் நாட்டிலே நம்பர் 1 தமிழ்நாடுதான் - இத்தனை ஆயிரம் மரணங்களா?
சாலை விபத்துகளில் நாட்டிலே நம்பர் 1 தமிழ்நாடுதான் - இத்தனை ஆயிரம் மரணங்களா?
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
ABP Premium

வீடியோ

MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
சாலை விபத்துகளில் நாட்டிலே நம்பர் 1 தமிழ்நாடுதான் - இத்தனை ஆயிரம் மரணங்களா?
சாலை விபத்துகளில் நாட்டிலே நம்பர் 1 தமிழ்நாடுதான் - இத்தனை ஆயிரம் மரணங்களா?
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
IPS Officer Transfer : ‘லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புது எஸ்.பி’ சென்னையிலும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!
‘லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புது எஸ்.பி’ ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!
ஒரே சார்ஜில் 521 கிலோமீட்டர் மைலேஜ்.. BYD Atto 3 காரில் இத்தனை வசதிகளா?
ஒரே சார்ஜில் 521 கிலோமீட்டர் மைலேஜ்.. BYD Atto 3 காரில் இத்தனை வசதிகளா?
DMK Vs Congress: 8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
Bengaluru Power Cut : பெங்களூருவில் சனிக்கிழமையும் பவர் கட்! எத்தனை மணி நேரம் இருக்காது.. முழு விவரம்
Bengaluru Power Cut : பெங்களூருவில் சனிக்கிழமையும் பவர் கட்! எத்தனை மணி நேரம் இருக்காது.. முழு விவரம்
Embed widget