மேலும் அறிய

ஆதாரங்களுடன் மக்கள் கோரிக்கை அனுப்பலாம்... அமைச்சர் வினோத் ரவி அழைப்பு எதற்காக?

: தமிழக சட்டமன்றத்தில் விரைவில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் பல்வேறு துறைகளுக்கான புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

கும்பகோணம்: கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் தொகுதிகளில் உள்ள கோவில்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், திருப்பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்பான கோரிக்கைகளை பொதுமக்கள் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கலாம் என்று அமைச்சர் வினோத் ரவி தெரிவித்துள்ளார். வரும் தமிழக பட்ஜெட்டில் இந்த கோரிக்கைகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பட்ஜெட்டை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு

இதுகுறித்து அமைச்சர் வினோத் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்றத்தில் விரைவில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் பல்வேறு துறைகளுக்கான புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

கும்பகோணம், "கோவில் நகரம்" என்ற பெருமை பெற்றுள்ளதால், அப்பகுதியில் உள்ள பழமையான கோவில்களின் வளர்ச்சிக்கும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

என்னென்ன கோரிக்கைகள் அனுப்பலாம்?

கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள கோவில்கள் தொடர்பாக பின்வரும் விவரங்களை ஆதாரங்களுடன் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்
அவசரமாக மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள்
சிதிலமடைந்த கோவில் கட்டிடங்கள்
சீரமைப்பு தேவைப்படும் கோவில் குளங்கள்
கோவில் தொடர்பான பிற முக்கிய தேவைகள் மற்றும் பிரச்சினைகள்

ஒவ்வொரு கோரிக்கையுடனும் புகைப்படங்கள் மற்றும் தேவையான ஆதாரங்களை இணைத்தால், அவற்றை பரிசீலிக்க வசதியாக இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்

பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வருகிற ஜூலை 15-ஆம் தேதிக்குள் புகைப்படங்கள் மற்றும் தேவையான விவரங்களுடன் கும்பகோணம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு

மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான கோரிக்கைகள் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக பட்ஜெட்டில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வினோத் ரவி தெரிவித்துள்ளார். கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் பகுதிகளில் உள்ள பாரம்பரிய கோவில்களின் பாதுகாப்பு, சீரமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கும்பகோணம் மக்களின் எதிர்பார்ப்பும், கோரிக்கைகளும்

அமைச்சரின் அறிவிப்பு குறித்து சமூகஆர்வலர்கள் தரப்பில் கூறுரைகயில், கும்பகோணம் மக்களின் மிக முக்கிய கோரிக்கைகள்: கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் மிக நீண்ட காலக் கோரிக்கையாகும். நெல் மற்றும் கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் (DPC), விளைபொருட்களைப் பாதுகாக்க நவீன குளிர்பதனக் கிடங்குகளையும் அமைக்க வேண்டும். கும்பகோணம் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, புறவழிச்சாலைத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட வேப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்காக ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் சுற்றியுள்ள கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி நீர் தடையின்றிச் சென்றடைய, பாசனக் கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் மிக முக்கியமானவை ஆகும். இதுகுறித்து பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு என்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Embed widget