தஞ்சாவூர்: தொடர்ந்து அவதூறு.. மனமுடைந்த பெண் தற்கொலை - கடிதத்தால் சிக்கிய இருவர்!
தன் தற்கொலைக்கு காரணமானவர்கள் அதே காலணி பகுதியில் வசிக்ககூடிய மணிகண்டன், ஆகாஷ் மற்றும் சிறுவன் ஒருவன்தான் என்று கைபட எழுதியுள்ளார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக பெண் கைப்பட எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பெண் தற்கொலைக்கு காரணம் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரனை மேற்க்கொண்டு வருகிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான பாலமுருகன் இவரது மனைவி 26 வயதான தமிழழகி. இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. திருமணம் ஆகி ஒராண்டு ஆகிய நிலையில் பாலமுருகனுக்கு வெளிநாட்டில் வேலைக்காக சென்றார். அதனால் மனைவி தமிழழகியை ஆவணம் பகுதியில் 10 வீடுகள் அடங்கிய காலணிபகுதியில் தனியாக வீடெடுத்து தங்க வைத்து சென்றுள்ளார் பாலமுருகன்.
இந்நிலையில் தான் கடந்த சனிக்கிழமை இரவு தமிழழகி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சடலத்தை கைபற்றிய திருச்சிற்றம்பலம் போலீசார் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தமிழழகி திருமணமாகி மூன்று ஆண்டுகள் தான் ஆகிறது என்பதால் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் ஆகியோர் முன்னிலையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
அப்போது திடீரென தமிழழகியின் உள்ளாடையில் கடிதம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதில் தன் தற்கொலைக்கு காரணமானவர்கள் அதே காலணி பகுதியில் வசிக்ககூடிய மணிகண்டன், ஆகாஷ் மற்றும் சிறுவன் ஒருவன்தான் என்று கைபட எழுதியுள்ளார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து 3 பேரையும் பிடித் போலீசால் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உறவினர்கள் மற்றும் கணவர் யாரும் உடன் இல்லாத நிலையில் தமிழழகி இரண்டு ஆண்டுகளாக தனிமையில் வசித்து வந்துள்ளார். இதை நோட்டவிட்ட இளைஞர்கள் அவரிடம் அத்துமீறி பேசியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதற்கு எதிர்பு தெரிவித்த தமிழழகி இது போன்று பேசினால் உங்கள் பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என்று இளைஞர்களை எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் தமிழழகியை தொடர்பு படுத்தி தொடர்ந்து பேச தொடங்கியுள்ளனர்.
இந்த விவகாரம் அந்த பகுதியில் அனைவரும் பேசி கொள்ளும் அளவிற்கு சென்று பெண்ணின் வீட்டிற்கும் தெரியவந்துள்ளது. இந்த புரளியால் தனிமையில் இருந்த தமிழழகி மனவேதனையில் இருந்துள்ளார். அதனால் கடிதத்தை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்ணை தற்கொலைக்கு தூண்டுதல் ,அவதூறு பரப்புவது, சாதியவன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் மணிகண்டன், ஆகாஷ் மற்றும் சிறுவன் ஒருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் தமிழழகியின் செல்போனை கைபற்றிய போலீசார் அதில் வாட்சப் தகவல்களை அழிக்கப்பட்டிருப்பதையும் கண்டுப்பிடித்துள்ளனர்.
அதனால் அவரது செல்போனை போலீசார் தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.தடயவியல் சோதனை முடிவு வந்த பிறகு தான் தற்க்கொலைக்கு என்ன காரணம், மேலும் சில நபர்கள் சம்பந்தபடுள்ளார்களா. என விசாரணை மேற்கொள்ள முடியும் மேலும் இந்த வழக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது என காவல்துறை அதிகாரிகாள் தெரிவித்தனர்.
இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..