மேலும் அறிய

பெரம்பலூர்: குடிநீர் தட்டுப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி! ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் தொடக்கம்

குரும்பலூர் பேரூராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் விதமாக தடையின்றி குடிநீர் வழங்கிடும் பொருட்டு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.5.36 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு எம்.பி., அருண்நேரு அடிக்கல் நாட்டினார். 

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.91 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணி மற்றும் 15 -வது நிதி ஆணைய மானிய திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி ஆகிய புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பணி நடந்தது. 

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ச.அருண்ராஜ் தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் எம்.பி., கே.என்.அருண்நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். குரும்பலூர் பேரூராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் விதமாக தடையின்றி குடிநீர் வழங்கிடும் பொருட்டு, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.91 கோடி மதிப்பீட்டில் குரும்பலூர் பேரூராட்சி வார்டு எண்.7, அண்ணா தெருவில் 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், வார்டு எண் 13 காமராஜர் தெருவில், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியும் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இக்குடிநீர் திட்டப் பணிகளுக்காக பாளையம் ஏரி அருகே மற்றும் மேட்டாங்காடு பகுதியில் 2 திறந்தவெளி கிணறு அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் மேல்நிலை மற்றும் தரைமட்ட தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. மேலும், குடிநீர் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு விரைவாகவும், தரமாகவும் முடித்திடவும், திட்ட மதிப்பீட்டு கால அளவான ஓராண்டிற்குள் அனைத்து பணிகளும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பேரூராட்சிகளின் செயற்பொறியாளருக்கு எம்.பி., அருண் நேரு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகநாத் சிங், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராஜ்குமார், திருச்சி மண்டல பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் ஜெ.சுப்ரமணியன், பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ் (குரும்பலூர்), வள்ளியம்மை இரவிச்சந்திரன் (அரும்பாவூர்), இரா.பாக்கியலட்சுமி (பூலாம்பாடி), செயல் அலுவலர் க.தியாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு இந்த புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சையில் ஆவின் பால் தட்டுப்பாடு... தவிக்கும் மக்கள்: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள்
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
தஞ்சை மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் 14 உரிமை கோராத உடல்கள்... அடையாளம் காண ோலீசார் அறிவிப்பு
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக்: அன்னப்பன்பேட்டை மக்கள் கடும் எதிர்ப்பு
பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக்: அன்னப்பன்பேட்டை மக்கள் கடும் எதிர்ப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget