மேலும் அறிய

தஞ்சையில் சக்கைபோடு போடும் நாவல் பழ விற்பனை..!- சர்க்கரை நோயாளிகளை டார்கெட் செய்யும் வியாபாரிகள்

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக  உள்ளது. நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும்.

நாவல் மரம் பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இந்த மரம் இந்தியாவுக்கும் இந்தோனீசியாவுக்கும் உரியதாகும். இம்மரம் 100 ஆண்டுகள் வரையும் வாழும். இம்மரத்தின் நாவல் பழம் செங்கருநீல நிறமுடையதாகவும் இனிப்பான சுவையுடையதாகவும் இருக்கும். துவர்ப்புச்சுவை உள்ள பழம் நாவல்பழம். அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் ஆகிய பெயர்களிலும், கருநாவல், கொடி நாவல், சம்பு நாவல், நரிநாவல் என பல்வேறு வகைகள் உள்ளன. மருத்துவ குணமுள்ள நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் பி போன்ற  தாதுக்கள் நிறைந்துள்ளன.

தஞ்சையில் சக்கைபோடு போடும் நாவல் பழ விற்பனை..!- சர்க்கரை நோயாளிகளை டார்கெட் செய்யும் வியாபாரிகள்

இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக  உள்ளது. நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். இதனை இரண்டு வேளைகள் என்று 3 நாட்களுக்கு  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம். பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக்குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்திசெய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரிசெய்யவும் நாவற்பழம் உதவுகிறது. 

தஞ்சையில் சக்கைபோடு போடும் நாவல் பழ விற்பனை..!- சர்க்கரை நோயாளிகளை டார்கெட் செய்யும் வியாபாரிகள்

நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க  வல்லது. நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடு உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு  தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு வந்தால் சிறுநீர்ப்போக்குக் குறையும். 

நாவல்பழச்சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம். தற்போது நாவல் பழம் சீசனாக இருப்பதால், கிராமங்களில் உள்ள மரங்களில் பழம் கொத்து கொத்தாக பிஞ்சுகளாகவும்,காய்களாகவும், பழங்களாகவும் உள்ளது. இப்பழம் பழுத்து கீழே விழுந்தால், அடிபட்டு அப்பகுதியில் மண் பழத்திற்குள் சென்று விடும், இதனால் பழத்தை சாப்பிட முடியாமல் போய் விடும்.

அதனால் தஞ்சாவூரை அடுத்த அன்னப்பன்பேட்டை கிராமத்தில், வாய்க்காலின் ஒரத்திலுள்ள, 10 க்கும் மேற்பட்ட நாவல் மரத்திலுள்ள நாவல் பழத்தை பறிப்பதற்காக, நாவல் மரத்தின் கீழ் மீன் வலையை, சிறுவர்கள் பிடித்து,கொண்டனர். பின்னர் மற்றொரு சிறுவர்கள்,மரத்தின் மேலேறி, மரத்தை உலுக்கினர், இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட நாவல் பழம் மீன் வலையை விழுந்தன.

தஞ்சையில் சக்கைபோடு போடும் நாவல் பழ விற்பனை..!- சர்க்கரை நோயாளிகளை டார்கெட் செய்யும் வியாபாரிகள்

நாவல் பழம் பழுத்து கீழே விழுந்தால், பழத்தின் மண் ஏறாமலும்,  பழம் அடிபடாமலும், மண் இல்லாமல் தரமானதாக இருக்கும். அப்போது தான் பொதுமக்கள் வாங்குவார்கள். இது போன்ற பழத்தால் உடலுக்கும் கேடாகாது. இத்தகைய சிறப்புள்ள மருத்துவ குணமுள்ள நாவல் பழம் சீசனாக இருப்பதால், கிராமப்பகுதிகளிலிருந்து நகர் பகுதிக்கு விற்பனைக்காக கூடையில் வைத்து கொண்டு வருகிறார்கள். ஒரு கூறு என்பது 10 பழமாகும், இதன் விலை ரூ. 10 மட்டும். இதில் சர்க்கரை நோய் உள்ளவர்கள்,  அதிக அளவில் வாங்கி சென்று உலர்த்தி, மருந்துக்காக வாங்கி செல்கிறார்கள் என நாவல் பழம் வியாபாரி தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
DMK alliance: வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
DMK alliance: வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
New Year Resolution: புத்தாண்டு வாழ்த்துகள் மட்டும் போதுமா..! இந்த உறுதிமொழிகளை கூட ஷேர் செய்யலாம்
New Year Resolution: புத்தாண்டு வாழ்த்துகள் மட்டும் போதுமா..! இந்த உறுதிமொழிகளை கூட ஷேர் செய்யலாம்
Best Car 2025: SUV-க்களை பின்னுக்குதள்ளி, விற்பனையில் அசத்திய செடான் - 41 வருடங்களில் ஒரே மாடல் தானாம்..
Best Car 2025: SUV-க்களை பின்னுக்குதள்ளி, விற்பனையில் அசத்திய செடான் - 41 வருடங்களில் ஒரே மாடல் தானாம்..
MK STALIN DMK: திராவிடப் பொங்கல்.! திமுகவினருக்கு பறந்த மு.க. ஸ்டாலினின் முக்கிய உத்தரவு
திராவிடப் பொங்கல்.! திமுகவினருக்கு பறந்த மு.க. ஸ்டாலினின் முக்கிய உத்தரவு
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Embed widget