மேலும் அறிய
Advertisement
பனை மரம் வெட்டத் தடை: அரசு உத்தரவுக்கு இயற்கை ஆர்வலர்கள் பாராட்டு!
தமிழ்நாடு அரசு வேளாண் பட்ஜெட்டில் பனை மரங்களை வெட்ட தடை விதித்தும், 76 இலட்சம் பனை விதைகளை வழங்கிட முன்வந்துள்ளதும், ரேசன் கடைகளில் பனை வெல்லம் வழங்க முன் வந்திருப்பதும் வரவேற்கத்தக்கது.
அழிவில் விளிம்பில் உள்ள பனை மரங்களை வெட்ட தடை விதித்த அரசிற்கு இயற்கை ஆர்வலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலையோரங்களில் பனை மரங்கள் கம்பீரமாக அணிவகுத்து நிற்கிறது. பனை மரத்தின் வேர் மிக ஆழமாக செல்வதால் புயலையும் தாங்க கூடிய வலுவை இயற்கை பனை மரங்களுக்கு தந்துள்ளது. மேலும் ஆறுகள், குளம், ஏரி போன்ற நீர்நிலைகளின் கரைகளில் அமைந்துள்ள பனை மரங்கள வெள்ள காலங்களில் கரை உடையாமல் பாதுகாத்து வருகிறது. பனை மரங்கள் ஒட்டு வீடுகளுக்கு உத்திரமாகவும், சத்தாகவும் பயன்படுகிறது.
பனை ஓலைகளை கொண்டு கீற்று, விசிறி போன்ற பொருட்களாக தயாராகிறது. அதுமட்டுமின்றி பனை வெள்ளம், பனங்கற்கண்டு போன்றவைகள் சர்க்கரை நோயை தடுப்பதுடன், பனை நொங்கு கால்சியம் சத்துள்ளது. கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்க கூடியது. எந்தவித உரங்கள் பயன்பாடுன்றி வளரக்கூடிய பனை மரங்கள் இயற்கை நமக்கு தந்த வரமாகும். இந்நிலையில் பனை மரங்கள் பல்வேறு காரணங்களால் வெட்டப்பட்டு வருகிறது. மேலும் சில இடங்களில் திராவகம் ஊற்றி அழிக்கப்பட்டு வருகிறது. இயற்கை தந்த உன்னதமாகவும், மனித வாழ்க்கையில் அங்கமாகவும் விளங்கும் பனை மரங்களை அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு வேளாண்மை பட்ஜெட்டில் பனை மரங்கள் வெட்ட தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கீரீன் நீடா இயற்கை சுற்று சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு கூறியதாவது...
2019 ஆண்டு முதல் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி கிரீன் நீடா அமைப்பு பனை விதைகளை விதைப்பு செய்தது. பின்பு பனை மரங்கள் விறகுக்காக வெட்டப்பட்ட போதும், திராவகம் ஊற்றி அழிக்கும் போது உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். பனை மரங்கள் வெறும் ரூ.100, 200-க்கும் வெட்டி விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.50 அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து பல சாலைகளில் பனை விதைகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பனை குறித்த செய்திகளை பாடப்புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும், பனை வெல்லத்தை ரேசன் கடை மூலம் வினியோகம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தோம். இந்நிலையில் தமிழ்நாடு அரசு வேளாண் பட்ஜெட்டில் பனை மரங்களை வெட்ட தடை விதித்தும், 76 இலட்சம் பனை விதைகளை வழங்கிட முன்வந்துள்ளதும், ரேசன் கடைகளில் பனை வெல்லம் வழங்க முன் வந்திருப்பதும் வரவேற்கத்தக்கது. இதனால் பனை தொழில் மேம்பாடைவதுடன், நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக உயரும்.
மேலும் கிள்ளிக்குளம் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பனை மரம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனை மரங்களை வெட்ட நேர்ந்தால் அதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டிருப்பது அழிவின் விளிம்பில் இருக்கும் பனை மரங்களை காப்பாற்ற எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை அரசிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு டெல்டா மாவட்டங்களை அலங்கோல படுத்திய கஜா புயல் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த மரங்களையும் அடியோடு சாய்த்தது. ஆனால் அந்த புயலையும் எதிர்த்து நின்று பலருக்கும் நன்மை பயக்கும் வகையில் இருந்த ஒரே மரம் இந்த பனைமரம் மட்டும்தான். ஆகவே பனை மரங்களை பாதுகாப்பது நமது அனைவரின் கடமை எனக் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion