NIFTEM-T Recruitment:பி.டெக், எம்.டெக் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்! அரசு கல்வி நிறுவனத்தில் வேலை!
NIFTEM-T Recruitment: தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை இங்கே காணலாம்.
தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (NATIONAL INSTITUTE OF FOOD TECHNOLOGY, ENTREPRENEURSHIP & MANAGEMENTTHANJAVUR (NIFTEM-T) உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
Senior Research Fellow (SRF)
Project Assistant (PA)
திட்டங்களின் விவரம்:
- A comparative study of different drying methods to make desiccated coconut (GAP-064)
- Development of smart foods, bio composites green packaging and bioenergy from agro- residues (GAP - 073)
- Development of millets supplemented gluten-free pasta and
baked weaning food formulation (STG - 003) - Fumigation for organic rice using CO2 for the control of stored pests (SRP-040)
கல்வித் தகுதி:
முதன்மை ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க எம்.டெக்., பி.ஹெச்.டி. ஆகிய படிப்புகளைல் முடித்திருக்க வேண்டும்.
திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க Agricultural Engineering/ Food Engineering/ Food Technology/Food Process Engineering ஆகிய படிப்புகளில் பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
Senior Research Fellow (SRF) - ரூ.31,000/-
Project Assistant (PA) - ரூ.25,000/-
வயது வரம்பு விவரம்:
இதற்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு நிரம்பியவர்களும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.niftem-t.ac.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க்க வேண்டிய இறுதிநாள் முடிந்த மூன்று நாட்களுக்குள் விண்ணப்ப படிவத்தில் PDF -யை : projectrecruitment@iifpt.edu.in என்ற முன்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், பெண்கள்,PWD ஆகியோர் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்படும் முறை:
இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவி செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 24.05.2024
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் - 30.05.2024 காலை 9.30 மணி முதல்
இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://niftem-t.ac.in/docs/srfpa12.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.