மேலும் அறிய
Advertisement
Nagapattinam: கடலில் மாயமான மீனவர்; 4 நாட்களாகியும் கிடைக்கவில்லை - மீட்க மீனவர்கள் கோரிக்கை
4 நாட்களாக 10 படகுகளில்100க்கு மேற்பட்ட மீனவர்கள் கடலில் தேடியும் கிடைக்காததால் மாயமான மீனவர் கிடைக்கவில்லை.
நாகப்பட்டினம்: கடந்த 28ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கடல் சீற்றம் காரணமாக தவறி விழுந்த மாயமான நம்பியார் நகர் மீனவர் அஞ்சப்பனை, 4 நாட்களாக 10 படகுகளில்100க்கு மேற்பட்ட மீனவர்கள் கடலில் தேடியும் கிடைக்காததால் கடற்படை மற்றும் விமானம் மூலம் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை நம்பியார் நகரை சேர்ந்த 58 வயதான அஞ்சப்பன் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகத்திற்கு சொந்தமான விசைப்படகில் 11 மீனவர்களுடன் கடந்த 28ம் தேதி நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது, கடல் சீற்றம் மற்றும் காற்று பலமாக வீசியதில் விசைப்படகின் பக்கவாட்டில் நின்ற அஞ்சப்பன் கடலில் தவறி விழுந்தார்.
இதையடுத்து படகில் இருந்த சக மீனவர்கள் அஞ்சப்பனை தேடியும் பணியில் ஈடுபட்டும் அஞ்சப்பன் கிடைக்கவில்லை. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் அஞ்சப்பனை தேடினர். பின்னர் கடலோர காவல் குழும போலீசாருக்கும் நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கும் தகவல் தெரிவித்தனர். பத்து படகுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று அஞ்சப்பனை தேடும் பணியில் 4 நாட்களாக ஈடுபட்டு வந்த நிலையில் அவர் கிடைக்காததால் நேற்று கரை திரும்பினர். கடலில் அஞ்சப்பன் மாயமானதை அடுத்து கடந்த நான்கு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் உடனடியாக மத்திய மாநில அரசுகள் கப்பல் மற்றும் விமானம் மூலம் தேடுதல் பணியை துரிதப்படுத்தி அஞ்சப்பனை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion