மேலும் அறிய

மணிப்பூர் சம்பவம்: நாகையில் செல்போன் டார்ச் லைட்டை ஒளிரவிட்டு மனிதநேய மக்கள் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்

மணிப்பூர் பழங்குடி பெண்கள் பாலியல் வன்கொடுமை  மற்றும் கலவரத்தின்  உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என நாகையில் செல்போன் டார்ச் லைட்டை ஒளிரவிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
 
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தி பெரிய அளவில் கலவரம் நடைபெற்று வருகிறது. அந்த கலவரத்தின்போது பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தும், இளைஞர்களை வெட்டி கொன்றும்  கலவரக்காரர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பழங்குடி பெண்கள் இரண்டு பேரை நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்து வந்து ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் 77 நாட்களுகுக்குப் பிறகு சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்டுமிராண்டித் தனமான செயலை கண்டித்து பல்வேறு அமைப்புகள் கண்டனங்களையும், போராட்டாங்களையும் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை ரயில் நிலையம் முன்பு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஓ.எஸ். இப்ராஹிம் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்காத மணிப்பூர் பா.ஜ.க அரசு உடனடியாக பதவி விலகி வேண்டும், கலவரத்தில் பாதிக்கப்பட்டு வீடுகள் இழந்த அனைவருக்கும் உடனடியாக வீடுகள் கட்டிக் கொடுத்து அவர்களை இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், கோர செயலில் ஈடுபட்ட கயவர்களை கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் கலவரத்தின் உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தங்களது செல்போன் டார்ச் லைட்டை ஒளிரவிட்டபடி மத்திய மோடி அரசுக்கு எதிராகவும், மணிப்பூர் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Embed widget