மேலும் அறிய

மயிலாடுதுறை: முன்கள பணியாளர்களுக்கு பிரதமர் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை வழங்கிய பாஜகவினர்

முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை பாஜக நிர்வாகிகள் மருத்துவர்கள், செவியலியர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாக மக்களை காப்பாற்றும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களின் அயராத உழைப்பையும், தியாகத்தையும் வெளிப்படுத்தி, உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றி வருகின்றனர். இதனை பாராட்டும் விதமாக பல்வேறு தரப்பு மக்களும், இயக்கங்களும், தொண்டு நிறுவனங்களும் பல்வேறு வகைகளில் அவர்களை பெருமைப்படுத்தி வருகிறது.

மயிலாடுதுறை: முன்கள பணியாளர்களுக்கு பிரதமர் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை வழங்கிய பாஜகவினர்

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களை போற்றியும், இந்திய மக்களுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்தி சாதனைப் படைத்ததற்கு மருத்துவக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தும், பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்ட வாழ்த்து அட்டை, சென்னை கமலாலயத்தில் இருந்து உலகம் முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை: முன்கள பணியாளர்களுக்கு பிரதமர் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை வழங்கிய பாஜகவினர்

இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 23 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு, அதில் 22 ஆயிரத்து 818 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது 116 பேர் மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 73 ஆயிரத்து 70 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு மேலும் பலருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஊரடங்கு காலத்தில் கொரனோ வைரஸ் தொற்றை கட்டுபடுத்த காவல்துறை, வருவாய்த்துறை, தூய்மைப் பணியாளர்கள் என பலரும் தங்கள் பணியினை சிறப்பாக செய்து வந்தனர். இவர்களை சிறப்பிக்கும் விதமாக பாஜக சார்பில் வாழ்த்து அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை: முன்கள பணியாளர்களுக்கு பிரதமர் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை வழங்கிய பாஜகவினர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

அறிக்கை கேட்ட ஆளுநர்; ஒப்புக்கொண்ட திமுக... கண்டனங்களும், விமர்சனங்களும்..

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மயிலாடுதுறைக்கு வந்துள்ள   பிரதமர் மோடி கையெழுத்திட்ட   இந்த வாழ்த்து அட்டைகளை மயிலாடுதுறை நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் மோடி.கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் ஆகியோருக்கும், காவல்துறை, ஊடகத்துறையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், எரிவாயு தகனமேடை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை வழங்கி, இனிப்புகளை வழங்கி பாராட்டு தெரிவித்து வருகின்றன.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Embed widget