Mayiladuthurai: சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு.. ஒன்றிணைந்த 9 மாவட்ட மீனவர்கள்.. அதிரடியாக அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்!
சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தரங்கம்பாடியில் நடைபெற்ற 9 மாவட்ட மீனவர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் மீனவ கிராமங்கள் ஒன்று கூடி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி இரட்டைமடி வலை, அதிவேக குதிரை திறன் கொண்ட எந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகு பயன்படுத்தி மீன் பிடித்தல் உள்ளிட்ட 21 மீன்பிடி ஒழுங்குமுறை தடைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதனால் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்கள், அதனை பயன் படுத்தாத மீனவர்கள் இன இருதரப்பு மீனவர்களால மீனவர்கள் இடையே பிரிவு ஏற்பட்டு, இருதரப்பினரும் அடிக்கடி மோதிக்கொள்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் இருந்து வந்தது. இந்நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன் சுருக்குமடி வலை பயன்படுத்தி 12 நாட்டிகல் மயிலுக்கு அப்பால் மீன் பிடிக்கலாம் என்று, உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது.

ஆனால் உச்சி நீதிமன்றம் சில நிபந்தனைகளையும் வழிகாட்டுதலும் கூறி இருந்தது. ஆனால் அதனை சுருக்குமடிவலை பயன்படுத்தும் மீனவர்களால் முழுமையாக நடைமுறை படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ கிராமம் அருகே கடலில் கடந்த மாதம் ஜூலை 31 ம் தேதி தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள் மூன்று பேரையும் தரங்கம்பாடி மீனவர்கள் சிறைப்பிடித்து, தரங்கம்பாடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து இப்பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சுருக்குமடி வலையை முற்றிலும்’ தடை செய்ய கோரி மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராமம் தலைமையில் 21 மீனவ கிராமங்கள் தொடர் தொழில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்காவது நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுருக்குமடி வலையை முற்றிலும் தடை செய்ய வலியுறுத்துவது தொடர்பாக 9 மாவட்ட மீனவர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தரங்கம்பாடி தலைமை மீனவ கிராமம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தின் முடிவில் சுருக்கு மடி, இரட்டைமடி வலை மற்றும் அதிவேக விசை படகை நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தி அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல், ராமநாதபுரத்தில் நடைபெறும் மாநாட்டில் கோரிக்கையை வலியுறுத்தி 9 மாவட்ட மீனவர்கள் சார்பாக முதல்வரிடம் நேரில் மனு அளிப்பது எனவும், மாவட்ட ஆட்சியரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் தடை செய்யப்பட்ட வலை மற்றும் அதிவேக படகுகளை நிரந்தரமாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒன்பது மாவட்ட மீனவர்களும் இணைந்து மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வந்த தொழில் மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், 21 மீனவ கிராமத்தினர் தொழிலுக்கு செல்வதாக தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் தெரிவித்தனர்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்























