கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த அரசு மருத்துவர் - சீர்காழியில் பொதுமக்கள் அதிர்ச்சி
சீர்காழி அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் மறுத்த சம்பவம் பொதுமக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா சுற்றுவட்டார பகுதி முழுவதும், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலே பிரதானமாக அதிகளவில் நடைபெறுகிறது. குறிப்பாக விவசாயத்திற்கு உற்ற துணையாக இருக்கும் மாடு, ஆடு போன்றவைகளும் அதிகளவு உள்ளன. இந்நிலையில் சீர்காழி கால்நடை மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இல்லாததால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த உதவி இயக்குனர். காலை முதல் கால்நடைகளுடன் காத்திருந்த பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே அரசு கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது.
சீர்காழி உதவி இயக்குனர் செல்லத்துரை தலைமையில் கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோமாரி தடுப்பு முகாம் நடைபெறுவதால் இம்மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளர் வேறு பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாம் பணிக்கு சென்று விட்டனர். இதனால் சீர்காழி கால்நடை மருத்துவமனையின் உதவி இயக்குனரும் கால்நடை மருத்துவருமான செல்லதுரை மட்டுமே பணியில் இருந்துள்ளார். இந்த சூழலில் காலை எட்டு முப்பது மணி முதல் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஆடு, மாடு நாய் பூனை உள்ளிட்ட தங்களது வளர்ப்பு பிராணிகளுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தனர்.
ஆனால், பணியில் இருந்த உதவி இயக்குனர் செல்லதுரை மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளர் இல்லாமல் தன்னால் சிகிச்சை அளிக்க முடியாது என தெரிவித்து, மருத்துவமனையை விட்டு வெளியே வந்து மரத்தடியில் நின்று கொண்டார். இதனால் செய்வதறியாது திகைத்த பொதுமக்கள் தங்களது கால்நடைகளுடன் மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருந்தனர். மேலும், உடனடியாக தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வலியுறுத்தி மருத்துவரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். ஆனால், மருத்துவ உதவியாளர் இல்லாமல் தன்னால் சிகிச்சை செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த உதவி இயக்குனர் செல்லத்துரை சிகிச்சை அளிக்க மறுத்து விட்டார்.
Crackers Bursting Time: 2 மணி நேரம்தான்.. கவனமாக இருங்கள் - பொதுமக்களுக்கு காவல்துறை அட்வைஸ்!
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கால்நடை உதவி இயக்குனர் ஈஸ்வரனிடம் கேட்ட பொழுது உடனடியாக மருத்துவ உதவியாளரை அனுப்பி வைப்பதாகவும், தொடர்ந்து அனைத்து கால்நடைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.