ஆண்டியூர் வாய்க்காலை தூர்வார கூறி சீர்காழியில் மக்கள் சாலைமறியல்
சீர்காழியில் ஆண்டியூர் வாய்க்காலை தூர்வார கூறி பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெரு உள்ளது. இந்த தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் குடியிருப்பு அருகில் ஆண்டியூர் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணி துறையினர் தூர்வாரப்படாததால் தற்பொழுது ஆக்கிரமிக்கப்பட்டு வாய்க்கால் கூர்ந்து போய் காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த வாய்க்காலில் சிறிது தூரம் மழைநீர் வடிகால் அமைப்பதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்ந சூழலில் மேட்டு தெரு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆண்டியூர் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். வாய்க்கால் முழுவதும் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை - சீர்காழி சாலை தென்பாதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது ஆண்டியூர் வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மழைநீர் வடிகாலை முழுமையாக அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையில் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சீர்காழி உதவி ஆய்வாளர் தில்லை நடராஜன் கிராம நிர்வாக அலுவலர் ரேவதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாய்க்காலை முழுமையாக தூர்வாரி மழைநீர் வடிகால் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பெயரில் சாலை மறியல் போராட்டத்தை விளக்கிக் கொண்டனர். இதனால் மயிலாடுதுறை சீர்காழி நாகப்பட்டினம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு மயிலாடுதுறையில் பாஜக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி வயது முதிர்வு காரணமாக நள்ளிரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்களும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஹீராபென் மோடி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி. சேதுராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஹீராபென் உருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Thunivu Update: தொடங்கியது ‘துணிவு’ சம்பவம்; கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திய படக்குழு..!