வயலில் யூரியா தெளித்துக் கொண்டு இருந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழப்பு - மயிலாடுதுறையில் சோகம்
வயலில் வேலை பார்த்த விவசாயி திடீரென வயலில் மயங்கி விழுந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் மற்றும் இன்றி அனைத்து தரப்பு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே வயலில் யூரியா தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாய தொழிலாளி வயலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கோடங்குடி நெடுமருதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமையன் என்பவரது மகன் 43 வயதான ராஜா. விவசாய கூலித் தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த விவசாயி வாசு என்பவரிடம் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வாசுவின் வயலுக்கு யூரியா, பொட்டாஷ் தெளிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வயலிலேயே மயங்கி விழுந்துள்ளார் ராஜா.
இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது மருத்துவமனை சவக்கிடங்கில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். வயலில் வேலை பார்த்த விவசாயி திடீரென வயலில் மயங்கி விழுந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் மற்றும் இன்றி அனைத்து தரப்பு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
TN Rain Alert: மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும்.. சென்னையில் நிலவரம் எப்படி? மழை அப்டேட் இதோ..
மேலும், ஏழை எளிய கூலி தொழிலாளியான விவசாயின் குடும்பச்சூழலை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் அவரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Diwali 2023 Car Offers: தீபாவளி சலுகை - செடான் மாடல் கார்களின் விலையில் ரூ.90 ஆயிரம் வரை தள்ளுபடி