(Source: ECI/ABP News/ABP Majha)
Diwali 2023 Car Offers: தீபாவளி சலுகை - செடான் மாடல் கார்களின் விலையில் ரூ.90 ஆயிரம் வரை தள்ளுபடி
Diwali 2023 Car Offers: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும், தங்களது செடான்(Sedan) மாடல் கார்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளன.
Diwali Offers on Cars 2023: விழாக்கால சலுகையாக பல்வேறு முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு சலுகையை அறிவித்துள்ளன.
ஆட்டோமொபைல் தீபாவளி சலுகை(Diwali Offers on Cars 2023):
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவும், விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலும் ஏராளமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சலுகையை அறிவித்துள்ளன. பண தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள், கார்ப்பரேட் சலுகைகள் மற்றும் சிறப்பு பண்டிகை என பல்வேறு வடிவங்களில் இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஹுண்டாய், ஹோண்டா, மாருதி சுசுகி, ஸ்கோடா மற்றும் வோல்க்ஸ்வாகன் ஆகிய நிறுவனங்கள் தங்களது குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. அதன்படி, இந்த பண்டிகைக் காலத்தில் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் கிடைக்கும் செடான் மாடல்கள்(Sedan Cars Offers) கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. குறைந்த சலுகையில் இருந்து அதிகபட்ச சலுகை வரையிலான விவரங்களை பயனாளர்கள் இங்கே அறியலாம்.
Hyundai Verna:
ஹுண்டாய் நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் வெர்னா மாடல். 115hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் இன்ஜின்யூனிட் மற்றும் 160hp திறனை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் யூனிட்டுடனும் இந்த மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு தற்போது அதன் மொத்த விலையில் 30 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Maruti Suzuki Dzire
இந்தியாவில் மிகவும் பிரபலமான செடான்களில் ஒன்றாக உள்ளது மாருதி சுசுகி டிசையர். விற்பனையை மேலும் அதிகரிக்கும் வகையில், மாருதி அரீனா விற்பனை நிலையங்களில் இந்த மாடல் காரின் மீது ரூ.40,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Honda Amaze
Dzire க்கு கடும் போட்டியாக இருக்கும் ஹோண்டா அமேஸ், விசாலமான இடம் மற்றும் தரமான ரைடிங் அனுபவம் மூலம் பயனாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹோண்டா கார் இந்தியா டீலர்கள். அமேஸ் மாடலுக்கு ரூ.70,000 வரையிலான நன்மைகளை வழங்குகின்றனர்.
Skoda Slavia
சிட்டி, வெர்னா மற்றும் விர்டஸ் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக இருப்பது ஸ்கோடா ஸ்லாவியா. இது இரண்டு டர்போ-பெட்ரோல் இன்ஜின் விருப்பங்களை கொண்டுள்ளது. 10 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயை தொடக்க விலையாக கொண்ட இந்த கார் மாடலுக்கு தற்போது, ரூ.75,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
Volkswagen Virtus
வோல்க்ஸ்வாகன் நிறுவனத்தின் விர்டஸ் கார் மாடல்களுக்கு இந்தியாவில் நவம்பர் 30ம் தேதி வரை, அதன் மொத்த விலையில் 80 ஆயிரம் ரூபாய் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
Honda City
ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி மாடல் காரில் பெட்ரோல் வேரியண்டிற்கு மட்டும் சுமார் 90 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன .