திருப்பாவையை இனிமையாக பாடிய இஸ்லாமிய பெண் - பகவத் கீதையை பரிசளித்த ஆட்சியர்
திருப்பாவை பாடலை இனிமையாக பாடிக் காட்டிய இஸ்லாமிய பெண்ணுக்கு பகவத் கீதையை பரிசளித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு மத சார்பற்ற மாநிலம் என்றால் அது மிகையாகாது. அதற்கு உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் மாநிலத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளது, நடந்தேறியும் வருகிறது. குறிப்பாக கிருஷ்ண ஜெயந்தி அன்று இஸ்லாமிய மக்கள் தங்கள் குழந்தைகளுக்கும் கண்ணன் ராதை வேடம் அணிவிப்பது, இதுபோன்று பள்ளிகளில் நடைபெறும் மாறுவேட போட்டிகளிலும், தங்கள் குழந்தைகளுக்கு மத பாகுபாடு பாராமல் இந்து கடவுள்களின் உருவங்களில் வேடம் இடுவது என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
#abpnadu திருப்பாவையை இனிமையாக பாடிக் காட்டிய இஸ்லாமிய பெண் - பகவத் கீதையை பரிசளித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர். pic.twitter.com/rDi3esYtJT
— JAGANNATHAN (@Jaganathan_JPM) February 17, 2023">
இந்நிலையில், மேலும் ஒரு உதாரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து கொண்டு, தமிழ் மொழியை அனைவரும் நேசிக்க வேண்டும், தாய்க்கு நிகரான தமிழ் மொழியை வளர்க்க பாடுபட வேண்டும் என அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தி பேசினார். தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அவர் பங்கேற்பு சான்றிதழை வழங்கினார்.
TN Weather Update: இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த பனிமூட்டம்...! அப்டேட் சொல்லும் வானிலை மையம்
அப்போது காவேரிப்பூம்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் சபிராபி சான்றிதழ் பெற்றபோது, ஆட்சியர் உடன் இருந்த தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அன்பரசி, இஸ்லாமியப் பெண்ணான சபிராபி திருப்பாவை, திருவெம்பாவை உள்ளிட்ட தமிழ் பாடல்களை இனிமையாக பாடுவதில் வல்லவர் என ஆட்சியரிடம் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழை வழங்கிய மாவட்ட ஆட்சியர், நிகழ்ச்சியின் முடிவில் மறக்காமல் சபிராபியை அழைத்து பாடலை பாடச் சொன்னார்.
அப்போது, "மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்" என்ற திருப்பாவை பாடலை இனிமையான ராகத்தில் மனமுருக சபிராபி பாடியதை கேட்ட மாவட்ட ஆட்சியர் மிகச் சிறப்பாக பாடியதாக அவரை பாராட்டியதோடு, அவருக்கு பகவத் கீதை புத்தகத்தை பரிசாக வழங்கினார். பெருமாளின் புகழ் பாடும் திருப்பாவை பாடலை இஸ்லாமிய பெண் பாடியதும், அவருக்கு மாவட்ட ஆட்சியர் பகவத் கீதை புத்தகத்தை பரிசாக வழங்கியதும் விழாவில் கலந்து கொண்டவர்களை மற்றும் இன்றி இதனை கேள்வியுற்ற இவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.