மயிலாடுதுறை: கொள்ளிட ஆற்றின் கரையில் இரவில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதன்
’’மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்தாண்டு 3 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்’’
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரைபகுதியை சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேற்று இரவு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கூறியதாவது.
தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதல்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளபட்டுள்ளது. மேலும் திருச்சி முக்கொம்பு அணை,மற்றும் மேட்டூர் அணையில் இருந்தும் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடபட்டுள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறக்கபட்ட போது அளக்குடி கிராமத்தில் உடைப்பு ஏற்பட்டு பாதிக்கபட்டது. அந்த இடத்தை தற்போது பாதிப்பு ஏற்படாத வண்ணம் தற்காலிகமாக சீரமைக்கபட்டுள்ளது.
நர்ஸ் பண்ற வேலையா இது? ஆயுள் தண்டனை பெற்ற விஷ ஊசி செவிலியர்! ஜப்பானில் கொடுமை!
மேலும் அதனை ஆய்வு செய்ததுடன் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாக்க நிவாரண முகாம்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்பட்டுள்ளது என்றும், மழைநீர் தேங்கி வடிகால் வசதி இல்லாமல் பாதிக்கபடும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலோ அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் துறை அதிகாரிகளிடம் எப்போது வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம். மேலும் பயிர் காப்பீடு குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் மழைக்காலங்களில் அதிகம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மயிலாடுதுறை மாவட்டத்தின் மேற்கொள்ளப்பட்டது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டத்தில் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 26,440 கன அடியில் இருந்து 21,027 கன அடியாக குறைந்தது
இந்தாண்டு மூன்று பேர் மட்டுமே மயிலாடுதுறை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். மலை பாதிப்புகளில் தேவையான இடங்களில் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கபடும் எனவும் தெரிவித்தார். இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
புதுச்சேரி: சித்தேரி அணைக்கட்டில் 2 ஷெட்டர்கள் பழுது - 25 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம்