மேலும் அறிய

மயிலாடுதுறை : தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

ஜூன் 12-இல் மேட்டூரில் நீர் திறப்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், திருச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில், மூன்று போகம் சாகுபடி செய்து வந்த விவசாயிகள், போதிய மழையின்மை, உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்காத காரணம் என விவசாயம்  இரண்டு போகமாக மாறிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்துப்போனதால், தற்போது ஒரு போக சாகுபடி மட்டுமே செய்து வருகின்றனர். 

மயிலாடுதுறை : தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜீன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் சுமார் 100 அடியை நெருங்கியுள்ளது. நிலத்தடி நீர் வசதி உள்ள மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, உள்ளிட்ட தாலுகாக்களில், மின் மோட்டார் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உழவடித்தல், நாற்றங்கால் அமைத்தல், அண்டை வெட்டுதல், நிலத்தை சமன்படுத்துதல் போன்ற முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றது. நிலத்தடி நீர் இன்றி, காவிரி நீரை நம்பியுள்ள பகுதிகளில், புழுதி உழவு செய்து, நேரடி விதைப்பில் விவசாயிகள் கவனம் செலுத்திவருகின்றனர். 

மயிலாடுதுறை : தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

தற்போது சுமார் 96 அடியாக மேட்டூர் நீர்மட்டம் உள்ள நிலையில், ஜீன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க  தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. பாய் நாற்றங்கால் அமைத்து மிஷின் மூலம் விவசாயிகள் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மயிலாடுதுறை : தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

இதனிடையே தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் ஆறு மற்றும் வாய்கால்களில் 65 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகளைத் தொடங்கியுள்ளன. இதில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும், இப்பணிகள் முழுமையாகவும் வேகமாகவும் நடைபெறுவதற்காகவும், 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 

மயிலாடுதுறை : தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் ஆகியன 431 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் தற்போது தூர்வாரப்படுகிறது. இதற்காக 5 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த மே மாதம் 28 ஆம் தேதி கனரக வாகனங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மயிலாடுதுறை : தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

மயிலாடுதுறை : தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

இப்பணிகளை வரும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் பாசனத்திற்காக திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தடைவதற்கு முன்னதாக முடிக்க திட்டமிடப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் குறுவை சாகுபடி மேற்கொள்ள வசதியாக விவசாயக்கடன் தள்ளுபடி, சிறப்புத்தொகுப்புத் திட்டங்களை அறிவித்து, தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Thanjavur District  Power Shutdown (16.10.26): 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கவனத்திற்கு... நாளை மிக முக்கிய நாள்: என்ன தெரியுங்களா? 
Thanjavur District  Power Shutdown (16.10.26): 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கவனத்திற்கு... நாளை மிக முக்கிய நாள்: என்ன தெரியுங்களா? 
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 321 அதிகாரி பணியிடங்கள்! வரும் 28ம் தேதி கடைசி நாள்
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 321 அதிகாரி பணியிடங்கள்! வரும் 28ம் தேதி கடைசி நாள்
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
தலைக்கு ஹெல்மெட்... தலைவர் படத்துக்கு டிக்கெட்: தஞ்சையில் 400 பேருக்கு இன்ப அதிர்ச்சி ஜோதி அறக்கட்டளையினர்
தலைக்கு ஹெல்மெட்... தலைவர் படத்துக்கு டிக்கெட்: தஞ்சையில் 400 பேருக்கு இன்ப அதிர்ச்சி ஜோதி அறக்கட்டளையினர்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget