Organ Donate: உடல் உறுப்பு தானம் செய்ய சிரமத்தை சந்தித்த விஜய் மக்கள் இயக்கத்தினர் - நடந்தது என்ன..?
மயிலாடுதுறை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டர் அணியினர் 10 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்.
நடிகர் விஜயின் பிறந்தநாள் கடந்த மாதம் தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விஜயின் பிறந்தநாள் மட்டும் இன்றி அதன் தொடர்ச்சியாக விஜய் பெயரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவரது ரசிகர்களும் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் விஜய் மக்கள் இயக்க தொண்டர் அணியினரும் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டர் அணியினர் உடல் உறுப்பு தானம் செய்ய முடிவு எடுத்தனர். அதற்காக அவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளை நாடி உள்ளனர்.
ஆனால், மாவட்டத்தில் உள்ள எந்த மருத்துவமனையிலும் உடல் உறுப்பு தானம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மாவட்டமான கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரியை நாடி உள்ளனர். அங்கேயும் அவர்களுக்கு உடல் உறுப்பு தானம் செய்ய வழியில்லை என தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் தங்கள் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காமல் அண்டை மாநிலமான புதுச்சேரிக்கு சென்று, அங்குள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தங்கள் உடல்களை தானம் செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்து வழங்கி வந்துள்ளனர்.
Cumbum Power Shutdown: தேனி மாவட்டத்தில் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை? இதோ விவரம்
தொடர்ந்து பாண்டிச்சேரியில் உடல் உறுப்பு தானம் செய்த விஜய் மக்கள் இயக்க தொண்டரணியினரை இன்று சீர்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜ்குமார் உடல் உறுப்பு தானம் செய்த அடையாள அட்டைகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தொண்டரணி பொருளாளர் விஜய்.சுமன், தினேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும், அவர்கள் இது குறித்து கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் தங்களைப் போன்று பல இளைஞர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதில் விழிப்புணர்வு அடைந்துள்ளதாகவும். ஆனால், அவர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வரும்போது, அதற்கான வாய்ப்புகள் இங்கே இல்லை என்றும், இதனை அரசை கவனத்தில் கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உடல் உறுப்பு தானம் செய்யும் வசதியினை ஏற்படுத்தி தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தும் அரசு இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை தீர்த்து உடல் உறுப்பு தானம் செய்ய முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.